கதை : ஒரே வரியில்
போலி சான்றிதழ் தயாரிக்கும் கும்பலால் பாதிக்கப்பட்ட நியூஸ் ரிபோர்ட்டர் கதாநாயகன் அக்கும்பலை வேரோடு களைவதுதான் கதை.
கதை சாதாரணம். ஆனால் திரைக்கதை அசாதாரணம். பிரமிப்பு. அட்டகாசம். இயக்குனர் சந்தோஷ், முருகதாஸ் ன் அசிஸ்டன்ட் டைரக்டர் ஆக இருந்தவர். முதல் படைப்பே ... இப்படியா? காட்சிக்கு காட்சி விறுவிறுப்பு. கைதட்டமா உங்களால இருக்க முடியுமா? சவால் விட்டிருக்கிறார் டைரக்டர்.
அதர்வா ஸ்மார்ட் கலக்கல் ஹீரோ. அபார துப்பறியும் மூளை. தேவையான இடத்தில் தேவையான அளவு நடிப்பு, தேவையான அளவு ஆக் ஷன். தேவையான அளவு காமெடி. பி.பி.சி. சேனல் இன்டெர்வியூவில் தமிழனை இங்கிலீஷ் தெரியாது என்று சொல்லி ஏளனம் செய்யும்போது இங்கிலிஷ்ல் பேசி அசத்துவது கைதட்டல். பர்த்டே சஸ்பென்ஸ் காமெடி நச். பாடல் காட்சிகளில் இளமையின் துள்ளல். சிறு சிறு தடயங்களை பிடித்து வில்லனிடம் மாட்டிக்கொண்ட நண்பனை காப்பாற்றுவது அசத்தல். சிங்கத்தை குகைக்கே சென்று அடிக்கடி சந்திப்பது ஆனால் மாட்டாமல் தப்பி வருவது பிரமிப்பு. ஆனால் செத்துக்கிடக்கும் நண்பனையும் பாக்கியராஜையும் பார்த்து அழும் காட்சியிலும், அனைத்து ரிபோர்ட்டர்களையும் போலி சான்றிதழ் கும்பலுக்கு எதிராக தயார்படுத்தும் வசனக் காட்சியிலும் இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம்.
ஹீரோயின் கேதரின் தெரசா. பெயரில்தான் தெரசா. மற்றபடி இறுக்கமான உடை, தொப்புள் காட்டும் கிளாமர் டான்ஸ், உதடுகள் உரசும் முத்தக்காட்சி, என வழக்கமான தமிழ் சினிமா ஹீரோயின்தான். "நடிக்க வாய்ப்பே தர மாட்டேங்கிராறே இந்த டைரக்டர்" என்று எங்கோ ஓரமாய் நின்று அழும் குரல் கேட்கிறது. ஆரம்பம் அதிக எதிபார்ப்பு. ஆனால் போக போக ஓரங்கட்டல். ஒரு ரிபோர்ட்டராக இருந்து கொண்டு ஆபத்து தெரியாமல், வில்லன் ஆட்களிடமே வந்து கெளதம் வந்தாரா என கேட்டு வெகுளித் தனமாக மாட்டிக் கொள்வது காட்சிக்கு பிளஸ். கதாபாத்திரத்துக்கு மைனஸ். கிளாமர் தவிர எதுவுமே தெரியாதா என்று என்ன தோன்றுகிறது.
பாடல்கள் ட்ரம்ஸ் சிவமணி. குத்தாட்டம். வில்லன் ஜாக்கி ஜரூப் யதார்த்தம். மிரட்டல். ஹீரோவுக்கு நிகரான துப்பறியும் மூளை. தூள்!.
லாஜிக் இல்லாத இடங்கள்
விறுவிறுப்பான திரைக்கதை மற்றும் காட்சிகளை தந்த டைரக்டர், யதார்த்தையும், கதாபாத்திரங்களுக்கு நடிக்க வாய்ப்பையும் தந்திருக்கலாமே!
கணிதன் - கணக்குல புலி. ஆனால் பொய்யன்.
62/100 - நல்ல படம் பார்க்கலாம்.
best song :
trailer :

- ஜென்யுநெஸ் வெரிபிகேஷன் என்ற ஒன்று இருக்கும் போது உண்மையிலேயே தமிழ் நாட்டில் அவ்வளவு போலி சான்றிதழ் இருப்பதாக மிகை படுத்திக்காட்டுவது, அப்படித்தான் வேலை வாங்குகிறார்கள், அதனால் மற்றவர்களுக்கு திறமையானவர்களுக்கு வேலை கிடைப்பதில்லை எனக் காட்டுவது நெருடல். நம்ப வைக்கும் பொய்.
- போலி சான்றிதழ் கொடுத்து லோன் வாங்கினால், லோன் வாங்கியவரை விட்டுவிட்டு அசல் சான்றிதழ் கொடுத்து வேலைக்கு சேர்ந்தவர்களை பிடித்து போலீஸ் துவசம் செய்வது அதிர்ச்சி. குழப்பம். ( பேங்க் அதிகாரிகளுக்கு கூடவா தெரியாது யார் லோன் வாங்கினார்கள் என்று?!)
- இடைவேளைக்கு முன்பே போலி சான்றிதழ் பற்றி ஹீரோ எல்லா சேனலிலும் ஒளி பரப்ப, படம் இறுதிவரை காவல் துறையும் அரசாங்கமும் சும்மா இருப்பது - பெரிய ஓட்டைகள்.
விறுவிறுப்பான திரைக்கதை மற்றும் காட்சிகளை தந்த டைரக்டர், யதார்த்தையும், கதாபாத்திரங்களுக்கு நடிக்க வாய்ப்பையும் தந்திருக்கலாமே!
கணிதன் - கணக்குல புலி. ஆனால் பொய்யன்.
62/100 - நல்ல படம் பார்க்கலாம்.
best song :
trailer :
No comments:
Post a Comment