சாகக் கிடக்கும் அம்மாவை காப்பாற்ற 48 நாட்கள் பிச்சைக்காரனாக மாறும் ஒரு பணக்காரனின் கதை.
விஜய் ஆண்டனி. ஹீரோ. நடிப்பதற்கு அதிகமான வாய்ப்பு கதையில். தயாரிப்பாளர் வேறு. ஆனால் முகத்தில் expressions ரொம்ப குறைவு. நிறைய இடங்களில் கதாபாத்திரமாக மாறவே இல்லை. body language சுத்தமாக இல்லை. அம்மாவுக்காக அழும் காட்சிகள் நிறைவாக இல்லை. பிச்சைக்காரனாக இருக்கும் போதும் டிப் டாப் ஆக உடை அணிந்து piza சாப்பிடுவது உறுத்தலான காட்சி. சிரிப்பதற்கு காசு கேட்கும் முகத்தை மாற்றினால் ஒழிய, பாஸ் ஆவது கடினம். காட்சிக்கு, இடத்துக்கு, கதாபாத்திரத்துக்கு தகுந்தார் போல் நிறையவே மாற வேண்டியிருக்கிறது. பாராட்ட வேண்டிய விஷயமும் இல்லாமல் இல்லை. கதாநாயகி பின்னால் ஜொள்ளு விடும் ஹீரோ இல்லை. வில்லனின் ஆட்களை பிளந்து கட்டுவது, எல்லாம் செய்து விட்டு, கடைசியில் தான் ஒரு பிச்சைக்காரன் என்று அறிமுகப்படுத்துவது, காதலியிடம் பிச்சை ஏந்துவது , அம்மாவிடம் கொஞ்ச நேரம் உயிரோட இருக்க பிச்சை கேட்பது என் பல காட்சிகளில் பலத்த கைத்தட்டலை பெறுகிறார்.
ஹீரோயின் சாதனா டைடஸ். தோன்றும் இடங்களில் கண்ணுக்கு குளிர்ச்சி. மனசுக்கு இதம். ஆனால் உண்மையிலேயே சமூக சேவகி என்றால் காதலன் பிச்சைக்காரன் என்று தெரிந்ததும் அதிர்ச்சி அடைவது எதனால். நடிப்பதற்கு கொடுத்த மற்ற வாய்ப்புகளை கட்சிதமாக முகத்தில் expressions உடன் செய்திருக்கிறார். பிச்சைக்காரன் என தெரிந்த பின்னும் அவனை மறக்க முடியவில்லை எனக் கூறுவது - காதல் காட்சிகளில் நச்.
காமெடிக்கு பஞ்சமில்லை. வில்லனின் ஆட்கள் பிச்சைக்காரனிடம் அடி வாங்கியதை யாரிடமும் சொல்லக் கூடாது என சத்தியம் செய்ய சொல்லும் காட்சிகள் - தியேட்டரில் சிரிப்பு வெடி. 500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டு அடிப்பதை நிறுத்தினால் எப்படி கருப்பு பணத்துக்கும் இந்தியாவின் வறுமைக்கும் எப்படி முற்றுபுள்ளி வைக்கலாம் என்று பிச்சைக்காரன் மூர்த்தி கொடுக்கும் அட்வைஸ் -சிந்திக்க வைக்கும் தெறி காமெடி - சபாஷ் இயக்குனர் சசி. பெரியப்பா கோபம் வரும் போதெல்லாம் டிரைவரை அடிப்பது அதே டிரைவர் கிளைமாக்ஸ்ல் திருப்பி அடிக்க அரங்கமே சிரிப்பில் அதிர்கிறது.
பின்னணி இசை காட்சிக்கு கை கொடுக்கவில்லை. 48-வது நாளை இன்னும் விறுவிறுப்பாக வைத்திருக்கலாம். போலீஸ் இரவு முழுவதும் சும்மா இருந்துவிட்டு மறுநாள் காலை 11 மணிக்கு வந்து நிற்பது நம்ப முடியவில்லை. சொத்து எனக்குதான் தான் என அலையும் பெரியப்பா கடைசி வரையில் ஒன்றுமே செய்யவில்லை - ட்யூப் லைட்.
ஆனால் எப்படியோ, பல வருடம் பிச்சைக்காரர் உலகத்தில் இருந்ததை போன்ற பீலிங்கஸ், அவர்கள் படும் கஷ்டத்தை ஆழமாக உணர வைத்ததோடு மட்டுமில்லாமல் அவர்களுக்கு ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்றும் நம் மனிதாபிமானத்தை தட்டி எழுப்புகிறார் இயக்குனர் சசி - கலக்கிட்ட சந்த்ரு.
70/100
No comments:
Post a Comment