Saturday 10 September 2016

இரு முகன் - திரை விமர்சனம்



ஹிட்லர் தனது படை பலத்தை பல மடங்கு அதிகரிக்க போரில் வெற்றி பெற பயன்படுத்திய ரகசிய மருந்துதான் ஸ்பீட் .  பல வருடங்களுக்கு பிறகு ரகசியமாக இருந்த அந்த மருந்தை கண்டுபிடித்து பணம் சம்பாதிக்கவும் தீவிரவாதிகளுக்கு ஹெல்ப் பண்ணவும் பயன்படுத்துகிறார் வில்லன் விக்ரம் (பெயர் : லவ் ).  அதை ஹீரோ விக்ரம்,  நயன்தாரா மற்றும் நித்தியா மேனன் உதவியுடன் எப்படி அடியோடு அழிக்கிறார் என்பதுதான் கதை.

படத்தின் விறுவிறுப்புக்கும் பலத்துக்கும் இந்த நாலு தான் காரணம் : 1. ஸ்பீட் - சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி
2. லவ் - வில்லன் விக்ரம் - வித்யாசமான பெண் பாவனையில்.
3. திடீர் திடீர் என வந்து அதிர வைக்கும் ட்விஸ்ட்.- அதுல ரொம்ப பெரிய ட்விஸ்ட்  இடைவேளை ட்விஸ்ட்.  இறந்து போனதா நினைஞ்ச நயன்தாரா மீண்டும் வில்லன் லவ் உடன்.

அது என்ன சயின்ஸ்?  நமக்கு ஆபத்து வரும் போது பயமும் சேர்ந்தே வரும். உடனே அட்ரீனல் சுரப்பி அட்ரீனலின் நாரட்ரீனலின் அப்படிங்கிற ஹார்மோன்களை சுரந்து நமது ரத்த நாளங்களும் தசைகளும் பல மடங்கு பலம் பெற்று நம்மை அந்த ஆபத்திலிருந்து தப்பிக்கவோ அல்லது எதிர்த்து போராடவோ தயார் படுத்தும்.

 இதே ஹார்மோனை செயற்கையாய் ஒருத்தருக்கு 5 நிமிடம் வரை செயல்படவைச்சா அவரடோ சக்தி என்னவெல்லாம் செய்யமுடியும் அப்டிங்கிறதுதான் வில்லன் விக்ரம் பயன் படுத்தும் சயின்ஸ்.  படத்தின் ஆரம்ப சண்டை காட்சியும், கிளைமாக்ஸில் இரண்டு விக்ரமும் மோதும் சண்டைக்காட்சியும் இந்த "ஸ்பீட்" -ஐ வச்சுத்தான்.

எதிரியை கொல்ல ஒரு கெமிக்கல்.  நர்ஸை மயக்கம் போட வைக்க ஒரு சயின்ஸ். டாக்டர்ஸை சிரிக்கவச்சு தப்பிக்க ஒரு சயின்ஸ்.  இப்படி எல்லாத்துக்கும் சயின்ஸை பயன்படுத்தும் வில்லன் விக்ரம் தனது சயின்ஸ் மூலமாவே சாவது கச்சிதம்.

இருமுகம்.  வில்லன் விக்ரம் ஹீரோ விக்ரமை விட ஒரு படி மேல.  என்ன நளினம். என்ன ஸ்மெயில்.  என்ன ஆக்க்ஷன்.  ஆனால் வில்லனை பற்றிய ரகசியத்தை வில்லனே
ஹீரோவிடம்  மணிக்கணக்காய் உளறி கொட்டும் சீனை என்றுதான் தமிழ் சினிமா விடப்போகிறதோ?!

முதுகை காட்ட, சின்ன பிள்ளைங்க போடும் பிராக் போட்டு தொடையை காட்டி ஆட, இப்படி பாட்டுக்கு மட்டும் திடீர் திடீர் என்று நயன்தாராவை கூப்பிடுகிறார்கள்.  "தேவைக்கு" நயன்தாராவை கதையில் பயன்படுத்திக்  கொ(ல் )ள்கிறார்கள்.

 நாலு வருடமா வில்லன் கூட இருந்தும் வில்லன் இவளை சந்தேகமே  படாமல் இருப்பது ஆச்சர்யம்.  ஸ்பீட் எடுத்தால் பலம் வரும்.  இழந்து போன மெமரி கூடவா திரும்ப வரும். சப்பக்கட்டு.

நித்தியா மேனனுக்கும் விக்ரமுக்கும் லவ் வந்துருமோன்னு ரசிகர்கள் எதிர்பார்க்க,  லவ் பண்ணும் மூடில் நம்ம விக்ரம் இப்ப இல்லை என்கிறார் டைரக்டர் ஆனந்த் ஷங்கர்.

நித்தியா மேனனுக்கு பொருத்தமான ரோல். கண்ணியமான நடிப்பு.  ஆனாலும் போலீசாக தெரியாமல் பெண்ணாகவே தெரிகிறார்.  தைரியத்தை விட தியாகமும் இரக்கமும் பூசி உடையில் மட்டுமே போலீசாக...

"ரெண்டு நிமிஷம் அவரோட பேசணும்." இது இந்தியன் போலீஸ்.
"24 மணி நேரத்துக்குள்ள உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்."
"24 மணி நேரத்துக்குள்ள ஸ்பீட் எடுத்து குழந்தை பெத்துக்கலாம்."
இவைகளை தவிர வேறு எந்த டயலாக்கும் உப்பு சப்பில்லாமல் இருக்கிறது.

பாடல்கள் இடை செருகல். படத்தோடு படத்தின் தேவைக்கு பொருந்தவே இல்லை.  நயன் தன்னை மறந்ததுக்கு ஒரு பாட்டு.  ஆனால் பாட்டு முடித்ததுமே ட்விஸ்ட் மூலம் நயனை வித்தியாசமாக காட்டுவது முந்தய பாட்டையே அர்த்தமில்லாமல் ஆக்குகிறது.

தம்பி ராமையா சிரிக்க வைக்கிறார்.  ஆனால் கதையில் அவருக்கு கொடுக்கப்பட்ட ரோல் பல இடங்களில் அவரையே வாய் மூட வைக்கிறது.

இன்னும் கொஞ்சம் காமெடி, நச் நச் டயலாக், பொருத்தமான பாடல்கள், ஸ்பீடுக்கு தகுந்த பலமான நம்பக்கூடிய சண்டை காட்சிகள் இப்படி இருந்திருந்தால் படம் பட்டையை கிளப்பியிருக்கும்.

படம் நல்லாருக்கு.  குடும்பத்தோட பார்க்கலாம்.
 படம் பர்ஸ்ட் கிளாஸ்.  பால்கனி இல்ல.

நம்ம ரேட்டிங். -70/100



Saturday 13 August 2016

ஜோக்கர் - திரை விமர்சனம்


"ராமன் ஆண்டால் என்ன? இராவணன் ஆண்டால் என்ன?
எனக்கொரு கவலையில்லே!" என்று வாழ்பவரா நீங்கள்?

''இந்த பொழப்பு பொழைக்கிறதுக்கு பீ - யை திங்கலாம்" (சென்சார் கட்டே இல்லாமல்!? )  என்று வாய் கூசாமல் சொல்லி  கிளைமாக்சில் சவுக்கடி கொடுக்கிறார் இயக்குனர் ராஜு முருகன்.  அப்படி என்னதான்  இருக்கு இந்த படத்துல?

ஒரு சாதாரண குடிமகனுக்கு இந்திய அரசு போடும் திட்டம் போய் சேர்கிறதா ?  அதற்கு பின்னால் என்னதான் நடக்கிறது?  அந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டிய அதிகாரிகளும் அமைச்சர்களும் மொத்த பணத்தையும் கொள்ளையடிக்க திட்டம் போட்டதின் விளைவு என்ன?  அது சாதாரண குடி மகனுக்கு பயன் படா விட்டாலும் பரவாயில்லை. எப்படி மற்றவர்கள் மத்தியில் கோமாளி (ஜோக்கர் ) ஆகும் அளவுக்கு ஒருவனை மனோ ரீதியாக பாதிக்கிறது என்பது தான் கதை.

வழக்கமா தமிழ் சினிமாவில் ஹீரோ - வை அறிமுகப்படுத்துவது நாம் எல்லாம் அறிந்ததுதான்.  (பேக்ரௌண்ட் மியூசிக் கலை கட்ட .... ரசிகர்கள் விசிலடிக்க...)

ஆனால் இங்கு கதையே வேறு.

படம் ஆரம்பித்ததுமே டாய்லெட் -ல் ஹீரோ(குரு சோம சுந்தரம்)...  ஒரு கிராமப்புற குடிசை வீட்டில் உடைஞ்சு போன கக்கூஸ் -ல் கால் கழுவும் காட்சியில் அறிமுகப்படுத்தப்படுகிறார்.  (இப்படி ஒரு காட்சியா? என எல்லோரும் முகம் சுழிக்க ... டாய்லெட்  தான் இந்த படத்தோட  ஹீரோவே  என்பதை பின்னால் பிளாஷ் பேக்கில் புரிய வைக்கிற அழகே தனி )  ஹீரோ பெயர் மன்னர் மன்னர். எல்லோரும் கூப்பிடுவது ஜனாதிபதி.  இசை என்ற பெயரில் ஒரு லேடி பி.ஏ . வேறு.


எங்கெல்லாம் மக்கள் பிரஞ்சனையோ அங்கெல்லாம் சென்று வினோதமான முறையில் (காமெடியாகவும் தான் ) போராடுகிறார்.  யார் இந்த ஜோக்கர்?  இவர் இப்படி மன நிலை பாதிக்கப்பட்டதற்கு யார்  காரணம்?  நம்மை அதிர்ச்சியில் உறைய வைக்கிறது.. ஆழமாக சிந்திக்க வைக்கிறது பிளாஸ் பேக் .

கட்சிக்கூட்டத்திற்கு லாரியில் ஆள் ஏற்றி செல்ல ...அதில் கிராமத்து குயிலும் செல்ல... ஜோக்கருக்கு காதல் மலர்கிறது.  டாய்லெட் இருந்தால் தான் கல்யாணம் பண்ணுவேன்னு காதலி கண்டிஷன் போட... இந்திய  அரசு சுத்தமான இந்தியா திட்டத்தில் இவரது கிராமத்தில் டாய்லெட் கட்டும் திட்டத்திற்கு நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட... ஜோக்கரின் திருமணமும் நடக்கிறது.  ஆனால் அமைச்சர் முதல் கவுன்சிலர் வரை எல்லோரும் காசு அடிக்க,  ஆளுக்கொரு கக்கூஸ் கோப்பையை மட்டும் கொடுத்தனுப்புகிறார்கள்.

ஜனாதிபதியே திட்டத்தை தொடங்கி வைக்க நேரில் வர பிரச்னை ஆரம்பிக்கிறது.  ஜோக்கர் வீட்டுக்கு வெளியே டாய்லெட் கட்டும் பணி அவசரமாக தொடங்குகிறது.  கட்டி முடிக்கப்பட்டதா? ஜோக்கரின் நிறை மாத கர்ப்பிணி மனைவியை அது படுத்த படுக்கையாய் ஆக்கிய கொடூரம் என்ன?  சமூக அவலத்தை எதிர்த்து போராடும் ஜோக்கருக்கு இறுதியில் என்ன நடந்தது என்பதுதான் மீதி கதை.

கையில் பணமும் இல்லை.  அந்நியனை போல் முடியை முகத்தில் தொங்கவிட்டு சமூக துரோகிகளை பந்தாட உடம்பில் தெம்பும் இல்லை. பணம் படைத்த, அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு அட்டூழியம் செய்யும் அரசியல் வாதிகளுக்கு முன்னால், நம் கதி என்ன?   ஒரு சாதாரண குடிமகனால் முதல் குடிமகன் (ஜனாதிபதி) என்று சொல்லிக் கொண்டு மக்கள் மத்தியில் ஜோக்கராக வலம் வரத்தான் முடியும்.  வேறு என்ன செய்ய முடியும்?
கேட்கிறார் இயக்குனர்.  என்ன யதார்த்தம்!

இந்த ஜோக்கர்  உண்மையிலேயே மன நிலை பாதிக்கப்பட்டவரா?  கடிக்க வந்த எறும்பை கூட பூ போல பிடித்து கீழே இறக்கிவிடும் இவரா?  அடிபட்ட ஆட்டுக்காகவும், ஆழ் துளை கிணற்றில் விழுந்த சிறுமிக்காகவும் போராடும் இவரா மன நிலை சரியில்லாதவர்?  இதையெல்லாம் பார்த்தும் பார்க்காமலும் போகும் நாம்தான் மன நிலை சரியில்லாதவர்கள்.  சொல்லாமல் சாடுகிறார் இயக்குனர்.
சபாஷ் ராஜு முருகன்!

 வலியால் மரண வேதனையில் துடிக்கிறார் ஜோக்கரின் மனைவி.  கருணை கொலைக்காக விண்ணப்பித்த ஜோக்கரின் கருணை மனு நிராகரிக்கப்படுகிறது.  கருணை கொலை மனிதாபிமானம் அற்ற செயல் என்கிறது இந்திய அரசியல் சாசனம்.  ஆனால் அவளை இந்த நிலைக்கு மரண வேதனைக்கு தள்ளியவர்களை என்ன செய்தது? இது மனிதாபிமானமற்ற செயல் இல்லையா?

 "ஊழல் இல்லாமல் ஒரு திட்டத்தை நிறைவேற்ற வக்கில்லை. உங்களிடம் கருணையை எதிர்பார்த்தது என் தவறுதான்.  நான் தான் ஜனாதிபதி. நானே என் மனைவியை கருணை கொலை செய்கிறேன்." என ஜோக்கர் பொங்கி எழ அரங்கமே கைதட்டலால் அதிர்கிறது.

நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர் கேட்டை கண்டு ஜனாதிபதி ஆட்சியை ஜோக்கர் அமல் படுத்த, சிரிக்கவும் வைக்கிறார். சிந்திக்கவும் வைக்கிறார் இயக்குனர்.

"ஒரு கண்ணில் காந்தி. ஒரு கண்ணில் பகத்சிங்.  பகத்சிங்கை அவுத்துவிடவா?" - என்ன வசனம்யா இது?

"திட்டம் மக்களுக்காகவா ?  இல்ல நீங்க கொள்ளை அடிக்கவா?"



வசனத்தில் வெட்ட வெளிச்சம்.  அனல் பறக்கும் சூடு.  காட்சியில், கதையில், கதாபாத்திரங்களில் யதார்த்தம்.  படத்தோடு ஒட்டிய  பாடல்கள் அத்தனையும் காதுக்கு இனிமை. அறிவுக்கு விழிப்பு.  திரைக்கதையும்  அருமை.

கோடியில் சம்பளம் வாங்கும் பெரிய ஹீரோ இல்லை.  கவர்ச்சி கன்னியாய், அழகு பதுமையாய் ஹன்சிகா இல்லை.  தம்மண்ணா இல்லை.  பெரிய காமெடியன் இல்லை.  அனல் பறக்கும் ஆக்ஷன் இல்லை. வெட்டி சவுண்ட் விடும் வில்லன் இல்லை.  படத்தின் பட்ஜெட்டும் ரொம்ப சிறுசு. கதையையும், நடிப்பையும், காட்சிகளின் யதார்த்தையும் மட்டுமே மூலதனமாக கொண்டு பெரும் வெற்றி பெற்றுவிட்டார் இயக்குனர்.

படம் தேசிய விருது வாங்குவது உறுதி.

தமிழ் சினிமா இது வரை பார்த்திராத படம்.

ஒவ்வொரு குடிமகனும் பார்க்க வேண்டிய படம்.

நம்ம ரேட்டிங்  - 85/100


Monday 25 July 2016

கபாலி படம் தோல்வியை தழுவியது ஏன் ?


ரஜினியின் ரசிகர்களே கெட்ட கனவாக மறக்க நினைக்கும் அளவுக்கு படம் தோல்வியை தழுவியது ஏன்?

1. படம் நல்லா வரவில்லை எனத் தெரிந்தும் அதற்கு இத்தனை கோடி செலவு செய்து, மக்களிடம் பலத்த எதிர்பார்ப்பை உண்டாக்கியது ஏன்?  படத்தை வெளிவராமல் செய்திருந்தால் கூட சூப்பர் ஸ்டார் அவர்களின் இமேஜ், ஒட்டு மொத ரசிகர்களின் உணர்வுகள் தவிடு பொடியாகாமல் இருந்திருக்கும்.  பணம் மட்டுமே இழப்பாக இருந்திருக்கும்.

2. கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்,  காட்சி அமைப்பு, பாடல் இப்படி எதுவுமே ஒரு சாதாரண புது முகம் நடிக்கும் படத்தில் கூட இப்படி இருக்காது என்று நினைக்கும் அளவுக்குக்கு கேவலமாக  ஒரு மெகா ஸ்டார் படத்தில் தந்திருப்பது மன வேதனை.  இது சூப்பர் ஸ்டார் அவர்களின் இமேஜை உடைக்க நடந்த திட்டமிட்ட சதியா? என்று கூட எண்ண தோன்றுகிறது.

3. மலேசியாவில் பாதிக்கப்படும் தமிழர்களுக்காக ரஜினி போராடுவதுதான் கதை என்றால் அது நம்பும் படியாக ஒரு சீன் கூட யதார்த்தமாக இல்லை.  அப்படியே அது உண்மை என்றாலும் அதற்கு ரஜினி ஏன் தாதாவாக இருக்க வேண்டும்?  போதைப்பொருள் இல்லை.  விபச்சாரமும் இல்லை.  யாரையும் கொள்ளையடிக்கவும் இல்லை.  நோக்கமும் தமிழர்களுக்காக போராடுவது.  பின் ஹீரோவாகவே இதை அழுத்தமாக சொல்லியிருக்கலாமே! ஏன் தாதா கெட்டப்?

4.கபாலி ரஜினி. பாட்ஷா ரஜினியிடம் ட்யூஷன் எடுக்க வேண்டும்.  ரஜினி படம் என்றாலே குழந்தைகளையும் ஈர்க்கும்  பன்ச் டைலாக், காமெடி, தாய்மார்களுக்கு பிடித்த செண்டிமெண்ட் காட்சிகள், ரசிகர்களை தியேட்டரிலேயே ஆட  வைக்கும் பாடல் காட்சிகள், சண்டை  காட்சிகள் இப்படி ஏராளமாய் இருக்கும்.  எந்திரானோடு  ஒப்பிட்டு பார்த்தால் இது ரஜினி படம்தானா ?  என்றே எண்ண தோன்றுகிறது.

5.  படத்தில் ஏகப்பட்ட ஓட்டைகள்.  ஹீரோயின் என்ன செய்கிறார்?  படம் முழுக்க மாசமான அம்மாவாக வந்து வந்து போகிறார்.  ஒரே ஒரு சீனை தவிர நடிப்பதற்கு வாய்ப்பே தரவில்லை.  ரஜினியை சராமாரியாக சுடுகிறார்கள் மீண்டும் வந்துவிடுகிறார்.  ஹீரோயினை சராமாரியாக சுடுகிறார்கள் மீண்டும் உயிரோடு காட்டுகிறார்கள்.  ரஜினி மலேசிய தமிழர்களுக்கு உதவி செய்வதாக காட்டும் எந்த காட்சியிலும் உயிர் துடிப்பே இல்லை. ஏகப்பட்ட கையாலாகாத வில்லர்கள் கூட்டம். ரஜினியை வயதான மேக்கப் இல்லாத தோற்றத்தில் காட்டுவது, நீ என் நாயாக இருப்பே என்ற மட்ட ரகமான வசனங்களை வில்லன் பேச அனுமதிப்பது என பல அத்து மீறல்கள்.   இந்த படம் ரஜினிக்கு எதிராக திரை யுலகத்தில் யாரோ திட்டமிட்டு செய்த பழிவாங்கும் நடவடிக்கையாகவே தெரிகிறது.  படமும் ஆமை வேகத்தில் கொஞ்சம் கூட விறுவிறுப்பின்றி நகர்கிறது.  நாளைய இயக்குனர் நிகழ்ச்சிகளில் கூட நல்ல நல்ல காட்சிகளை பார்க்கலாம் போல.  ஆனால் ஒரு மெகா ஸ்டார் படத்தில் இப்படி காட்சிகளை இது வரை யாரும் பார்த்திருக்க முடியாது.

படம் முழுக்க ரஜினி பேசும் பன்ச் மகிழ்ச்சி.  ஆனால் இந்த படம் ரஜினிக்கு மட்டுமல்ல, ரஞ்சித்துக்கு மட்டுமல்ல, ஒட்டு மொத்த திரையுலகத்திற்கும், ரஜினி ரசிகர்களுக்கும் மிகப்பெரிய துக்கம்.
ரஜினியை பொறுத்த வரை இது அவருக்கு மிகப்பெரிய விபத்து.
எந்திரன் 2- வில் மீண்டும் விஸ்வரூபம் எடுப்பார்  என்று நம்புவோம்.

20/100 இந்த படம் பார்க்கும் படியாக இல்லை.

Saturday 2 July 2016

ஜாக்சன் துரை - திரை விமர்சனம்


இந்திய பேய்களுக்கும் பிரிட்டிஷ் பேய்களுக்கும் நடக்கும் சண்டையை ஹீரோ சிபிராஜ் எப்படி முடிவுக்கு கொண்டுவந்து அயனாவரம் ஊர் மக்களை காப்பாற்றுகிறார் என்பதுதான் கதை.

முதல் பாதி திகில் கலந்த காமெடி. பேய் பங்களாவில் பேய் இருக்கிறதா? அல்லது அந்த ஊர் ப்ரெசிடென்ட் பயமுறுத்த செய்த செட்டப்பா ? என்று சஸ்பென்ஸ் + காமெடி கலந்து கொடுத்திருக்கிறார்கள்.  போலீஸ்க்கு பயந்து துப்பாக்கி கடத்திய இருவர் தெரியாமல் பேய் பங்களாவில் பதுங்க, பிரிட்டிஷ் பேய்களால்  பலியாக, என படத்தின் ஆரம்பமே திகிலுடன் அமர்க்களமாக தொடங்குகிறது.

காமெடிக்கு பஞ்சமில்லை.  பேய் பங்களாவுக்கு உள்ளே காமெடிக்கு கருணாகரனும், வெளியே யோகி பாபுவும்  என வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறார்கள்.  இங்கிலிஷ் நியூஸ்பேப்பரை ஜாக்சன் துரை பங்களாவின் கேட்டில் வைத்தால் காணாமல் போகிறது என யோகி பாபு விளக்க, தொடர்ந்து ஆடு, அரிசி மூட்டை என சகலத்தையும் வாங்கி கொண்டு அட்டகாசம் பண்ணும் பேய் பங்களாவில் 7 நாள் தங்கிவிட்டு உயிரோடு வெளியே வருபவனுக்குத்தான் என் மகள் பிந்து மாதவி என் ஹீரோயின் அப்பா சொல்ல, காதலில் விழுந்த சிபிராஜும், முறை மாமன் கருணாகரனும் சவாலை ஏற்று பேய் பங்காளவிற்குள் நுழைய, ஒவ்வொரு நாளும் எப்படி கழிகிறது என்பதை திகில், ஆக்ஷன், காமெடி, பிளாஷ் பேக் என கலக்கலாக கொடுத்திருக்கிறார்கள்.

பிரிட்டிஷ் காலத்தில் இந்த ஊரில் இருந்த ஜாக்சன் என்ற வெள்ளைக்காரன் கொடுமைக்கு பலியானவர்கள் பலர். அதில் இந்திய கொடியை பறக்கவிட போய் உயிரை விட்ட சத்யராஜ் மகளும் ஒருத்தி.  பலி வாங்க சத்யராஜ் போக, ஜாக்சன் சுட, அங்கிருந்த வெடுக்குண்டு பீப்பாய்கள் வெடித்து சிதற சத்தியராஜ் கூட்டாளிகள் மட்டுமல்ல, ஜாக்சனும் குடும்பத்துடன், மற்ற துப்பாக்கி ஏந்திய பிரிட்டிஷ்காரர்களுடன்  பலியாக, அந்த பங்களாவே பேய் பங்களாவாக மாறுகிறது என்பதை ஒரு வெள்ளைக்கார அழகி பேய் கூலாக குளித்துக்கொண்டே சொல்ல பிளாஷ் பேக் ஆக சொல்லும் விதம் - இயக்குனர் தரணிதரனின்  வித்தியாசமான சிந்தனை.

கல்லறையில் செத்து போனதாக சொல்லப்படும் பிந்து மாதவியை சிபிராஜ் தேட, அவளே பேயாகநடித்து  சிபிராஜை துரத்த - கலக்கல் காமெடி.

"அவர்கள் உளவாளிகள்" என கத்திக்கொண்டு ஒவ்வொரு நாளும் சிபிராஜையும் கருணாகரனையும் பேய்கள் துவைத்து எடுக்கும் காட்சி முதல் பாதியில் பயந்து போன குழந்தைகளையும் வயிறு குலுங்க  சிரிக்க வைக்கும் சூப்பர் காமெடி.

 மொட்டை ராஜேந்திரனும் வெள்ளைக்காரன் பக்கமிருந்து சத்யராஜ் பக்கம் கட்சி மாறும் பேயாக காமெடியில் பட்டையை கிளப்புகிறார்.

ஏற்கனவே செத்து போன பேய்கள் இனி ஒருவரை ஒருவரை எப்படி கொல்ல முடியும் என்ற பெரிய ஓட்டையை கூட சிந்திக்க விடாத அளவுக்கு காமெடி கைகொடுத்திருக்கிறது. -சபாஷ்.

சிபிராஜ் பேய் பங்காளவிற்குள் நுழைந்ததும் ஹீரோயின் பிந்து மாதவிக்கு வேலையே இல்லாமல் போகிறது.  அவரையும் பேய் பங்காளவிற்குள் நுழைத்திருந்தால் ஒருவேளை ஓரங்கட்டப்படாமல் அவருக்கும்  நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கலாம்.

நல்ல படம். குடும்பத்துடன் குழந்தைகளுடன் சிரிக்கலாம்.சும்மா போய்டு  வாங்க பாஸ்.

நம்ம மார்க் - 60 / 100





Monday 27 June 2016

மெட்ரோ (2016) - திரை விமர்சனம்


"திருடாதே பாப்பா திருடாதே!
திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக்கொண்டே இருக்குது
அதை சட்டம் போட்டு தடுக்குற கூட்டம் தடுத்துக் கொண்டே இருக்குது."

இந்த எம்.ஜி.ஆர். பாட்டு தாங்க மெட்ரோ படம்.

"பட்ட பகலில் சென்னையில் துணிகர செயின்பறிப்பு.  பைக்கில் வந்த வாலிபர்கள் கைவரிசை." - இந்த தினசரி நியூஸ்கு  பின்னாடி ஒரு பெரிய கதையே இருக்குன்னு சொல்லியிருக்காரு  டைரக்டர் ஆனந்த கிருஷ்ணன்.

நல்ல மிடில் கிளாஸ் குடும்பம். பொறுப்புள்ள ரிட்டயர்டு அப்பா.  பாசத்தை கொட்டும் அம்மா. லோன் வாங்கி தம்பியை இன்ஜினியரிங் படிக்க வைக்கும் அண்ணன்(ஹீரோ-புதுமுகம் ஷிரிஷ் ). என்னங்க குறை? பேசாம படிப்பை முடிச்சமா நல்ல வேலையில சேர்ந்தமான்னு இல்லாம, கேர்ள்  பிரண்ட் பைக் வாங்க நச்சரிக்க, ஆப்பிள் ஐ போன் வச்சு கிளாஸ்மேட் ஆசை காட்ட செயின் பறிப்பு கூட்டத்திற்குள் நுழைகிறார் தம்பி(சத்யா)....

"ஆசை பட்ட எல்லாத்தையும் காசு இருந்தா வாங்கலாம்
 அம்மாவை வாங்க முடியுமா? " - இந்த பாட்டு இந்த தம்பி காதில விழலையே.... !  மகனின் நடத்தை அறிந்து பதறி போன அம்மா அண்ணனிடம் சொல்ல போனை எடுக்க, அந்த அம்மாவையே துடிதுடிக்க கொன்னு செய்யினை பறித்து செல்லும் காட்சி... வயலென்ட் உச்சம்.  பணப்பேய் புடிச்சா என்ன ஆகும்?  உங்களை யோசிக்க விடாதுங்கறத யோசிச்சி பாருங்க மக்களே!  சொல்கிறார்  டைரக்டர்.

செயின் பறிப்பு கூட்டத்தின் தலைவன் பாபி சிம்ஹ - நல்லவனா இருக்கும் கெட்டவன்.  "நகத்தை வெட்டு. பொண்ணுங்க உடம்புல கீறல் படக் கூடாது. அவங்க நமக்கு குடுக்குற தெய்வம்." - என்ன டிஸிப்ளின் ..!?  "பணம் இருந்தா உலகமே உனக்கு அடிமை "ன்னு தன் கூட்டத்துக்கு போதிக்கும் இவர் ஒரு போதைக்கு அடிமை. கூட இருந்த பாதிக்கப்பட்ட நண்பன் கீறல் மீது கனிவு.  தொழிலில் கண்ணியம்.  கண்டிப்பு. சூப்பர் ஸ்டார் ஸ்டைல். இதோடு  .... முகத்தில் நவரசத்தையும் அள்ளிக் கொட்டும் "அட்ரா சக்கை" கதா பாத்திரம். ஆனால் கதையின் முடிவுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல ஒதுங்கி உச்ச கட்ட போதை தலைக்கு ஏற பைத்தியமாகி நிற்பது சப்புன்னு ஏமாற்றமாக (ஆனால் அர்த்தமுள்ளதாக)  இருக்கிறது.

ஒரு  பக்கம் அம்மாவை கொன்னது தம்பின்னு தெரியாம செயின் பறி கும்பலை தேடி வேரோடு பிடுங்க ஆரம்பிக்கிறார் ஹீரோ.  இன்னொரு பக்கம் கூட்ட தலைவனையே போதை ஊசி போட்டு பைத்தியமாக்கிவிட்டு தலைவனாக அவதார மெடுக்கிறார் தம்பி.  இருவரும் கிளை மாக்சில் சந்திக்க, எனக்கு இந்த வாழ்க்கைதான் புடிச்சிருக்குனு சொல்லும் திருந்தவே மனமில்லாத தம்பியின் கதையை,  மனதை கல்லாக்கி கொண்டு முடிக்கிறார் பாசக்கார அண்ணன்.  ஆசைப்பட்ட கேள் பிரண்ட் பக்கத்தில் இல்லை. ஆசை காட்டி தொழிலில் இறக்கிவிட்ட நண்பன் பக்கத்தில் இல்லை.  பாசத்தை கொட்டிய அம்மாவையும் கொலை செய்து உயிரை விடும் தம்பி சாதித்தது என்ன?  - இதற்கு தானா ஆசை பட்டாய் பாலகுமாரா?

"காசேதான் கடவுளடா" - நம்பும் வில்லன் பைத்தியமானதுதான் மிச்சம்.  நம்பும் சத்யாவும்  கொலைகார பாவியாகி கொலையானதுதான் மிச்சம்.  காசு கடவுளா? பேயா ? கேட்கிறது மெட்ரோ படம்.

"பெத்தவங்க பிள்ளைங்களோட ஆசையை நிறைவேத்தலாம்.  ஆனா பேராசையை நிறைவேத்த கூடாது. அதுவே அவங்க கெட்ட வழியில போக காரணமாயிரும்." வில்லனின் பன்ச் டயலாக் எவ்வளவு ஆழமான உண்மை.

பெண்ணே!  நகை மீது ஏன் இந்த மோகம்?  இது உனக்கு அழகா? ஆபத்தா? - மெட்ரோ படம் விடை சொல்கிறது.

ஆணோ பெண்ணோ, வயது வந்த பிள்ளைக்கு வீட்டில் தனி அறை எதுக்கு?  வசதிக்கு மீறின ஆடம்பரம் எதுக்கு?  கெட்டு குட்டி சுவரா போயிருவாங்க... - எச்சரிக்கிறது மெட்ரோ படம்.

ஒரு சில வயலென்ட் காட்சிகளில் மட்டும் (பயமாக இருந்தால் மட்டும் ) பெண்களும் குழந்தைகளும் கண்ணை மூடி கொண்டால் போதும்.  மெட்ரோ படத்தை குடும்பத்தோடு பார்க்கலாம், A சர்டிபிகேட்டை தவறாக புரிந்து கொள்ளாமல்...

நம்ம மார்க் - 70/100 .  Click to view the trailer:





Wednesday 25 May 2016

பென்சில் - திரை விமர்சனம்

பென்சில் - அழகாக வரைய நினைத்த  திகில் ஓவியம்

கதை :  தனியார் பள்ளிதான் கதைகளம்.  +2 படிக்கும் ஒரு "பொறுக்கி" மாணவன், பலரும்  கொல்ல துடிக்கும் அளவுக்கு BAD  BOY   -ஆக மாறுகிறான். எத்தனை பேர் அவனை கொலை செய்ய துடிக்கிறார்கள் என காரணத்தையும் காட்சிகளையும் அடுக்குவது முதல் பாதி கதையாக ,  கொலையை செய்தது யார்? என கதாநாயகியும் நாயகனும் டிடெக்டிவ் நாவல் ரேஞ்கில் துப்பறிவது மீதி பாதி.

பள்ளி பருவத்து விடலை காதல், தனியார் பள்ளிகளில் நடக்கும் அட்டுழியங்கள், செல் போன் லேப்டாப் இவற்றால் திசை மாறும் பணக்கார பிள்ளைகளின் நிலை, வழிகாட்டியாக இருக்கவேண்டிய ஆசிரியர்களின் சபலங்கள், இப்படி பல விஷயங்களை  வரைய நினைத்து ஓரளவுக்கு வெற்றியும் பெற்றுள்ளது இந்த பென்சில்.

இது  நல்லாருக்கே!


1. இசை அமைப்பாளர் ஜீ வீ . பிரகாஷ் ஹீரோ வாக, அதுவும் +2 மாணவனாக, அதுவும் அவர் டூயட் பாட்டுக்கு அவரே இசை அமைக்க, சபாஷ் .

2. கண்ணியமாகத்தான் நடிப்பேன் எனும் நமது அழகு கன்னி ஸ்ரீ திவ்யா, கமிஷ்னர் மகளாக ,  +2 படிக்கும் பொண்ணாக ,  துப்பறியும் கதா பாத்திரம் வேறு.  செத்து கிடப்பது கூடப்படிக்கும் பையன்.  இவ்வளவு கூலாவா இன்வேச்டிகஷன் பண்ணுவீங்க? (நீங்க செஞ்சா சரி தாங்..கம்மணி ...!)

3.  காட்சிக்கு காட்சிக்கு விறுவிறுப்பு. அடுத்தது என்ன அடுத்தது என்ன என்று ஆவலோடு....கிரைம் நாவல் திரையில்.

4. "பணத்தை கட்டிவிட்டால் கடமை முடிந்தது என நினைக்கும் பெற்றோர்கள் கவனிக்க வேண்டிய தங்கள் பிள்ளைகளின் மறுபக்கம்" :   +2 படிக்கும் மாணவனின் அதிர்ச்சி தரும் அத்து மீறல்கள்.

5. பள்ளி அறையில் மாணவன் பிணம். கொலைகாரர்கள் என சந்தேகப்படும் நபர்கள், துப்பறிபவர்கள்  அங்கும் இங்கும் ஓட்டம்.  மாரத்தான் பயிற்சி என பிரின்சிபால் விளக்கம் கொடுக்க,  ஊர்வசியின் (ISO இன்ஸ்பெக்ஷன். ஆபிசராக) ஆச்சர்யம். பலே காமெடி.

இது நல்லவா இருக்கு?

1.  முதல் பாதியில் வளரும் காதல் பிற் பாதியில் கொலைகாரனை தேடுவதில்  காணமல் "போயே போச்சு "

2.  spy கேமரா,  டீசேர்ஸ் சல்லாபம், மாணவனின் ப்ளாக் மெயில் +2 படிக்கிற பச்ச புள்ளங்க மனச கெடுகிரீங்கலேப்பா! (ஆசிரியரா வேற கொலை காரரா காட்டுறீங்க! என்னமோ போங்க!?)

3.  கிளைமாக்ஸ் எதுக்கு  லாங் லெக்ட்ஷர், டி.வி. சீரியல் அழுகை காட்சிபோல  சப்புன்னு இருக்கே!
சாம்பார நல்லா வெச்சிட்டு கடைசியில உப்பு அள்ளி போட்டுடீங்களே ...பாஸ்!

பென்சில் - ஷார்ப்னரை பிரிந்த பென்சில்
.
40/100
 


Saturday 7 May 2016

24 twenty four - திரை விமர்சனம்




நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை 
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை 
முடிந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே ...

இது நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் P . B ஸ்ரீநிவாஸ் பாடல். இதை மாற்றி எழுதிய படம்தான் சூர்யாவின் 24.

கடந்த காலத்திற்குள் குதித்து 26 வருடங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்ட  தனது   அம்மாவையும் அப்பாவையும் ஒரு மகனால் காப்பாற்ற முடியுமா?  அதை அரிய கண்டுபிடிப்பான "டைம் வாட்ச்" உண்மையாக்கினால்!   அது தான் 24 -ன்  கதை.


சபாஷ் ! என்ன விறுவிறுப்பான கதை !

அப்பா சூர்யா தனது டைம் வாட்ச் கண்டுபிடிப்பில் வெற்றிபெற...  கொக்கு போல் தவம் கிடந்த அண்ணன் சூர்யா வாட்சை கைப்பற்ற போராட... அப்பா சூர்யா மனைவியுடன் கொல்லப்பட...  குழந்தையாக தப்பித்த மகன் சூர்யா 26 வருடங்கள் கழித்து அதே வாட்சை அடைய... 26 வருடங்கள் தன் இளமையை கோமாவில் தொலைத்த அண்ணன் சூர்யா மீண்டும் அவதாரம் எடுக்க...  மகன் சூர்யா எப்படியோ  உண்மையை கண்டுபிடித்து, கடந்த காலத்திற்குள் குதித்து அம்மாவையும் அப்பாவையும் காப்பாற்ற முயல...  மீண்டும் குழந்தையாகி போகிறார். (என்ன கொடுமைடா இது?) அப்புறம் அப்பா அம்மா எப்படி உயிர் பிழைத்தார்கள்?    அண்ணன்  சூர்யாவிற்கு என்ன ஆயிற்று என்பதுதான் கிளைமாக்ஸ்.  கலக்குறீங்க டைரக்டர் விக்ரம் குமார்...

What is done cannot be undone.  இது ஷேக்ஸ்பியர் சொன்னது.  WHAT IS DONE CAN BE UNDONE. இது சூர்யா இந்த படத்தில் சொல்றது.  


அப்பா சூர்யா பெரிய விஞ்ஞானி.  ஆனால் அப்பாவி.  அண்ணன் சூர்யா வில்லாதி வில்லன்.  ஆனால் கோமாவில் இளமையை தொலைத்து வீல் சேரில் உட்கார்ந்த பாவி. மகன் சூர்யா காதலி சமந்தாவை கரெக்ட் பண்ண அப்பாவின் டைம் வாட்சை யூஸ் பண்ணும் தீராத விளையாட்டுப் பிள்ளை.  ஆனால் 24 மணி மட்டுமே கடந்த காலத்தில் பின்னோக்கி செல்லும் வாட்சை ஒரே நாளில் பல வருடங்கள் பின்னோக்கி செல்லுமாறு மாற்றி அமைக்கும்போது "புலிக்கு பிறந்தது பூனையாகுமா" பிள்ளை.   மூணு கெட்டப்பில் இப்படி பட்டையை கிளப்பும் சூர்யா.

இமாஜினோ ரொமன்சொ பீலியாவால் அவதிப்படும் சமந்தா ரசிக்க வைக்கும் காமெடி.  சமந்தாவுக்கு புடிக்கும் என்பதால் கடந்த காலத்தில் குதித்து டோனி அடித்த baalai சிக்சரில் இருந்து காப்பாற்றி இந்தியன் கிரிகெட் டீமை வெற்றிபெற செய்யும் சூர்யா -  கனவிலும் நினைத்து பார்க்க முடியாத (எந்திரன் படத்தில் காதலிக்காக கொசுவை கொண்டுவரும் ரஜினியையும் ஓவர்டேக் செய்யும்) அச்சாத்தியம். பர்ஸ்ட் சிம்ப்டம் செகண்ட் சிம்ப்டெம் என சூர்யா காதலை விதைக்க வெட்கத்தில் பூரிக்கும் சமந்தா கொள்ளை அழகு. (படத்தோட கடைசியில் இப்படி சின்ன பாப்பாவா மாத்திடிங்கலேய்யா... இது உங்களுக்கே அடுக்குமா?)

பிளஸ் பிளஸ் பிளஸ் 

1. H.G. Well's Time Machine நாவலை (யாருக்கும் தெரியாமல்)  டைம் வாட்ச் என தமிழ் ரசிகர்களுக்கு தகுந்தாற்போல் ரசிக்கும்படியான  விறுவிறுப்பான கதையாக மாற்றி தந்தது 

2. கொடுத்த வாக்கிற்காக...  வளர்ப்பு மகன் சூர்யாவுக்காக... திருமண வாழ்க்கையையே துறந்த சரண்யா

3. பிரமிக்க வைக்கும் அறிவியல், ரசிக்க வைக்கும் காதல், கண்களை குளமாக்கும் அம்மா மகன்  பாசம்,  மெய்சிலிர்க்க வைக்கும் வில்லத்தனம். காதலியை கரெக்ட் பண்ண டைமை பிரீசாகி வண்டியை பஞ்சராக்கும் காமெடி.  இப்படி எல்லாம் கலந்த நிறைவான படம்.

ஏன்? ஏன்? ஏன்?

1.  Time Watch எதிர் காலத்தில் செல்ல உதவாதா? இல்லை அப்படி ஒரு சிந்தனை எழவே இல்லையா? (இரண்டாம் பாகத்திற்கு ஒதிக்கி வைத்து விட்டார்களோ என்னவோ?)
2.  கடந்த காலத்திற்குள் சென்றால் அதை பார்க்கலாம் சரி.  மாற்றவுமா முடியும்?  அப்படி மாற்ற முடிந்தால் ஏற்கனவே நிகழ் காலத்தில் நடந்தது என்ன ஆகும்?  காணாமலா போகும்? (என்னமோ போங்க!)
3. என்னமோ திரவத்தை ஊற்றுகிறார்.  மின்சாரத்தை பாய்ச்சுகிறார்.  டைம் வாட்ச் அக்டிவேட் ஆகிறது.  எந்த அறிவியல் விதியும் டச் கூட பண்ணவில்லை.  பின் எப்படி சயின்ஸ் சினிமா ஆக முடியும்?

நம்ப முடியாததையும் நம்ப வைப்பது கலைஞனின் கைவண்ணம்.  நமது மகிழ்ச்சியே, பிரமிப்பே அவன் வெற்றி.

அந்த வரிசையில் இது தமிழ் சினிமாவில் ஒரு குறிஞ்சி மலர்.
90/100  குடும்பத்துடன் பார்க்கலாம்.

Saturday 16 April 2016

தெறி - விஜய் ரசிகர்களுக்கும் விஜய் ரசிகர் அல்லாதவர்களுக்கும்


தெறி - கமர்ஷியல் படமா?  ஆமாம்பா ஆமா.
தெறி - குடும்ப படமா?  ஆமாம்பா ஆமா.
தெறி - ACTION படமா?  ஆமாம்பா ஆமா.
தெறி - விஜய் ரசிகர் அல்லாதவர்களுக்கும் புடிக்குமா? ஆமாம்பா ஆமா.

கதை:  (ஒரே வரியில்)
மினிஸ்டருடன் (மகேந்திரன்) மோதி தன் அம்மாவையும்(ராதிகா), மனைவியையும்(சமந்தா) பலி கொடுத்து தன் செல்ல மகளுடன் (நைனிகா) ஒதுங்கி வாழும் போலீஸ் விஜய், வில்லன் மீண்டும் சீண்டிப் பார்க்க, தெறித்து பதிலடி கொடுப்பதுதான் கதை.

கதை புதியதல்ல.  ஆனால் சொல்லியவிதம் புதியது.

விஜய்க்கு மட்டுமல்ல, ஹீரோயின் சமந்தாவுக்கும் நடிக்க நிறையவே வாய்ப்பு கொடுத்த டைரக்டர் அட்லிக்கு ஒரு தேங்க்ஸ்.

காதல் காட்சியாகட்டும், குடும்ப காட்சியாகட்டும், செண்டிமெண்ட் காட்சியாகட்டும், நிறுத்தி.... நிதானமாக... feel பண்ணும்படியாக, ரசிக்கும்படியாக, கண்கலங்கும்படியாக,  திருப்தியா,  மனநிறைவாக
சொல்லியிருக்கிரார்கள்.  டாக்டர் சமந்தா, காதலி சமந்தா, மனைவி சமந்தா, மாமியாரை அம்மாவாக நினைக்கும் மருமகள் சமந்தா - இப்படி சமந்தாவுக்கும் நிறைவான காட்சிகள். (ஆனாலும் உதட்டு முத்த காட்சியையும்,  தொப்புள் பாடல் காட்சியையும் என்றுதான் விட போகிறார்களோ?).

பேபி நைனிகா படத்துக்கு பெரிய பிளஸ் பாயிண்ட்.  கள்ளங்கபடமற்ற பேச்சு ரசிக்க மட்டும் வைக்காமல் காமெடியையும் அள்ளிதெறிக்கிறது.  எதாவது ஐடியா இருக்கா என எமி ஜாக்சனிடம் பேசும் காட்சியிலிருந்து கடைசி காட்சியில் வில்லனிடம் sorry சொல்ல கேட்கும் எல்லாகாட்சியிலும் தூள்  பரத்துகிறார்.

சிவா படத்தில் ரஜினி,  வகுப்பில் புகுந்து ரகளை செய்யும் ரவுடிகளை துவைத்து எடுக்கும் காட்சியையே இங்கு விஜய் சற்று வித்தியாசமாக காமெடியாக செய்திருக்கிறார்.  மூன்றாம் வகுப்பு பாடத்தில் வரும் கேள்விகளை கேட்டு பதில் சொல்லாத ரவுடிகளை பின்னிஎடுப்பது நீங்கள் கூட்டி செல்லும் குழந்தைகளை நிச்சயம் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும்.

காதல் காமெடி ஆக்சன் செண்டிமெண்ட் என எல்லாம் கலந்த கலவையாக ஒரு கலக்கு கலக்கியிருக்கிறார் விஜய்.  பாட்டுகளும் அதற்காக தேர்வு செய்த இடங்களும் கண்ணுக்கு குளுமை. அம்மாவை பறி கொடுத்துவிட்டு சாக்லேட் வாங்க வில்லன் கொடுத்த பத்து ரூபாயை வாங்கிகொண்டு அழும் பையன்,  அதே வில்லன் சாகும் போது வாங்கிய சாகலேட்டை பிரித்து சாப்பிடுவது- நச்.

பல தமிழ் படங்களில் வந்த காட்சிகளே மீண்டும் பார்ப்பது போன்ற உணர்வு - படத்தின் மைனஸ்.
1. ஸ்கூல் பைட் சீன் - சிவா
2. வன்முறையை விட்டு ஒதுங்கி ஹீரோ வாழ்வது - தலைநகரம், பாட்ஷா
3. ஹீரோ ஹீரோயின் வில்லனால் தாக்கப்படுதல் - கஜினி
4. பிள்ளைகளை பிச்சையெடுக்க விடுவது - நான் கடவுள்
4. மினிஸ்டர் மகன் ஒரு பெண்ணை கெடுப்பது - பல படங்கள்
5. ஹீரோ வில்லன் பலிவாங்கும் படலம் - பல படங்கள்

விஜய் பாடும் முதல் பாட்டு.... விஜய்க்கு முற்றிலும் பொருந்தா gaana குரல் - விஜய் வாய் அசைக்காமல் இருந்திருக்கலாம்.

பிரபு, ராதிகாவுக்கு, ஏன் அமி ஜாக்சனுக்கு கூட அழுத்தம் குறைவான கதாபாத்திரங்கள்.  இன்னொரு காதலை சொல்ல அமி ஜாக்சனுக்கு வாய்ப்போ அவகாசமோ இல்லை. மொட்டை ராஜேந்திரன்... நீங்கள் இப்படி காமெடி பண்ண ஆரம்பித்தால் இனி உங்களுக்கு வில்லன் கதாபாத்திரத்தை யார் தருவார்கள்?

நம்ப முடியாதா காட்சிகளும் இல்லாமல் இல்லை. இறந்து விட்டாள் என நினைத்த சமந்தா மீண்டும் எழுந்து குழந்தையை மாடிக்கு சென்று எடுத்துவருவது.  மினிஸ்டர் மகனை vijay எப்படி கண்டிபிடித்தார் என்பதையே காட்டாமல் அவரை பாலத்தில் தொங்கவிட்டு ஸ்டைலாக போஸ் கொடுக்கும் விஜய்.  வில்லன் கூட்டத்தை கொல்ல இறந்துபோன DC விஜய்குமாராக வருவது.  படமே முடிந்த பிறகு ஒரு பாடல் காட்சி. (Amy Jackson உடன்)  பார்பதா போகலாமா என குழம்பிபோய் நின்றபடியே பார்க்கும் மக்கள். இப்படி காட்சிகள் பல இருந்தாலும் படத்தின் வெற்றியை அவை சிறிதும் பாதிக்கவில்லை.

தெறி - கலக்கல் ஹீரோவின் கலக்கல் படம்.
குடும்பத்துடன் பார்க்கலாம்.

70/100
 





Friday 8 April 2016

Dhanush - Secret Marriage with Meha Akash?


Recently a new photo showing Dhanush and Meha Akash as bridegroom and bride was shared in social network?  Who is this lady? Is it secret marriage of Dhanush with her?  If Rajinikanth knows, what will happen?  The photo was a great shock to the fans of Dhanush, though on the one side, they used to think that this is common one in cine industry and in the life of an actor. Still their confusion remains unanswered.  But the real fact is different.  The lady is none other than the heroine of Ennai Noki Payum Thotta which is on the move with Dhanush as hero.  The photo is nothing but one of the scenes in the movie.

Saturday 2 April 2016

Darling 2. - Movie Review


Darling II is not a sequel to Darling I since it has no connection with the first part except that it is also a ghost story.

Ram and Ayisha love each other and seek the help of Aravind (Ram's friend) since they strongly know that Ram's family will never show the green signal.  Aravind arranges for their register marriage but just wants to play with his friend and Ayisha that leads to the suicide of the lovers who mistake Aravind and die with a revenge mood against him.  This is unfolded to the audience little by little with suspense and ghost play.


The story starts with Aravind's trip to Valparai along with his friends and their lonely stay at his estate where Ram had already stayed while alive.  Haunted by ghost, all friends and audience are revealed that the ghost of Ram has already entered Aravind to kill him on the same date on which Ram committed suicide.

The story is not without the element of suspense.  Ayisha who brings food to the friends in the estate is reported to have died already very late in the movie but not impressively.

The major fault is that suspense is misplaced - it is kept where it shouldn't be and it is not where it should be.  The betrayal of Aravind is not really betrayal and so the very revenge of the ghost becomes meaningless.  The graphics elephant, though looking real, and the very scene with it looks forcefully inserted.  Dialogues and songs fail to appeal mostly.


There are scenes surely to burst into laughter and there are scenes to chill your nerves.  Ayisha has done her part well and to the needs.   Last few scenes are so fast and reveal all suspense in a hurried way, in a way not tasteful and sheding charms.

Story is serious but presentation is not with very much thrilling and  ghost horrors.

You needn't fear.  It really doesn't terrify you more than what your wife can do.

A movie with an interesting story but with more disappointments of horrors.

35/100





Saturday 26 March 2016

Thozha - A Film not for your eyes but for your heart


Characters: Karthi, Nagarjuna, Tamannaah, Prakash Raj, Jayasudha, Vivekh, Kalpana, Anushka, Shriya Saran
Direction: P. Vamshi
Origin of Story: A box office hit French movie - "the Intouchables"

Karthi, with love at heart but no money in hand and Nagarjuna, with Multi millions in hand and no one to love him meet together where blossoms the movie "The Thozha".  The former realizes the importance of money in life and the latter feels the necessity and the value of love and care.  Both characters are complimentary to each other. 

It is a film not for entertainment but to spray the love over the roots of your soul and make you feel the warmth of it scene to scene.  Karthi, after losing his parents in accident, is brought up by his mother's sister(Jeya Sudha) who already has a son and a daughter.  Poverty steals away his education and makes him steal.  He is out on parole, looks for a job, attracts Nagarjuna by his very nature and gets appointed as his caretaker.  




The whole movie is about how Karthi, a frequent resident of jail, turns into a new leaf and on the other side how Nagarjuna, after mundane success in everything including money, finds the lost paradise.   Karthi's family misunderstands him but it is Nagarjuna who shows them a mirror to Karthi's Soul with the power and money he has. Karthis's sister falls in love with a rich man's heir whose marriage bell rings because of power,money and status of Nagarjuna who, as the best friend would do, comes for help ( the tile "Thozha" is made alive")  Again on another occasion, when Karthi's brother is searched by police in a case of attempt murder, it is Nagarjuna who comes for rescue by sending his caring lawyer-cum-friend (Prakashraj).  Thus Nagarjuna extends his help to Karthi in times of need but sends Karthi himself away to care his family though he greatly needs him who has become his very life itself.

Life is a mystery.  You are a mere puppet in the hands of destiny.  Director unfolds the life of Nagarjuna as an example.  Nagarjuna who knows nothing other than success is made to sit on a wheel chair when he flies in the sky.  His money is countless but he is bedridden.  The stress and the worries he has, especially after departing Nandhini (Anushka), his sweetheart poses a challenge to Karthi who simply washes his stress out by arranging a surprise birthday party, by calling his sweetheart understand each other and moreover reducing the distance between Nagarjuna and Streya who sincerely loves him.  Though Karthi calls Nagarjuna as "anna" (brother), their love and care for each other cools our heart with their true friendship.

Comedy arises from the real nature of Karthi rather than from the  little chances offered to Vivek, an affectionate lawyer who brings Karthi out on parole and directs him find a job at Nagarjuna's.  Karthi's indulge in so called  painting that Prakashraj buys for Rs. 2 lakh just for Nagarjuna and the stories thereafter leads to heart warming situational humour.




Anushka, Streya and Tamanna appear on the scene but no one including Tamanna gains momemtum because of the story that is centered on Karthi and Nagarjuna.  They understand their limitations and leave way to Karthi and Nagarjuna by doing what they are asked for.  Songs are few and they too react to the demand. Even a fight scene is not required to take it to a grand success.  Because it is movie that aims to play the fibres of your heart and produce a melodious tune of love and relationship.

From beginning to end, no scene is boring.  You feel more and think less.  There are scenes which make you shed tears at the realisation of true love and care and there are scenes which make you laugh rolling on the floor.  Tamil cinema has seen a heart-touching movie after a long time and this movie will definetly prove to be a milestone both for Karthi and Nagarjuna.  

Thozha  - the best movie that you can watch with your family.

85/100 a first class movie for all class people. 

Tuesday 15 March 2016

காதலும் கடந்து போகும் - சீக்கிரம் காணாமல் போகும்


கதை : ஒரே வரியில்

திருந்தும் ரவுடியும் போராடி நல்ல வேலை வாங்கும் அழகு பெண்ணும் சந்திக்கும் அனுபவங்கள்.

ஹீரோ - விஜய் சேதுபதி 
நல்லவர்.  தான் கெட்டு போனது போலவே தன் கூட இருக்கும் மணிகண்டனும் நாசமாக  கூடாது என எங்காவது பெட்ரோல் பம்ப் போய் பிழைக்க சொல்லும் போது  நல்லவர்.   புத்தி சாலித்தனமாக கதாநாயகி வேலை கிடைக்க இண்டர்வியு ரூம்ல செய்யும் அட்டகாசம் -அதற்காக தான் அடையும் அவமானத்தை சாதாரணமாக எடுத்து கொள்ளும் போது  ஒரு தியாகி.  மறுநாளும் சரக்கு வாங்கிட்டு வந்து மடோனாவை கூப்பிடும் போதும், பாரில் அடி வாங்கிவிட்டு கேசுவலாக கூலா திரும்பும் போதும் -வைகை காமடி புயலு.


  • உங்களுக்கு சண்டை போட தெரியுமா தெரியாதா அப்படின்னு எங்களுக்கு தெரியனும்.  எக்ஸ் போலீஸ் சமுத்திர கனியிடம் குத்துப்பட்டு கிளைமாக்ஸ்ல உயிருக்கு போராட...நீங்க ஹீரோ தானா அப்படின்னு ஒரே ட வு    ட்    டு...........!
  • சண்டை போடாம குத்து படாமலே நீங்களும் பெட்ரோல் பம்பல பத்து நிமிஷம் முன்னாடியே ஏன் திருந்தி வேலைக்கு போகல (இதெல்லாம் ரொம்ப பழைய கதங்கன்ன ...!
  • டைரக்டர்  ஒரு i love you  சொல்ல கூடவா permission தரல.!


கதாநாயகி - மடோனா செபஸ்டியன்.  சரக்கை ஊத்திகுடிக்கும் அழகு தமிழ் பெண். (சபாஷ்)  படித்து வேலை தேடி அலையும் ஒரு சராசரி குடும்ப பெண்ணின் (?! சரக்க மறந்த்ருங்க பாஸ்) கதாபாத்திரத்தை பத்திரமாக பக்குவமாக  செய்த ...... ரொம்ப யதார்த்தம் தான் போங்க.

  • படம் முழுக்க சேதுபதிய காதலிக்கிற ஐடியாவே கிடையாதா? வேலை கிடைக்க அவரு எவளவு கஷ்டபடுறாரு .  நீங்க அவருக்காக என்ன செய்றீங்க?  கடைசியா ....ரெண்டு வருஷம் கழிச்சு ஒரு நாள் .... பெட்ரோல் பம்பல ....இதுக்கு பேர்தான் காதலும் கடந்து போகும்ன்கறதா?
இதுதாங்க பிளஸ் 
  • க க க போ பாட்டு (இசை +ஆட்டம் =கலக்கல்)
  • காமெடி , யதார்த்தமான வசனம் -ஈஸ்கிமொவும் நாயும் உதாரணம் - நச் நச் 
  • பல கதாபாத்திரங்கள்...  யதார்த்தமான நடிப்பு.  சத்யா சுந்தர் அடியாள் வேஷம்,  பேச்சு - மனதில் பூ வானம் 
  • ஹீரோஇன் அளவான (கிளமாருக்குள் இறங்காமல் )யதார்த்தமான நடிப்பு
  • பொருத்தமான ரசிக்க வைக்கும் பின்னணி இசை

இதுதாங்க மைனஸ்
  • ஏதோ கதைன்னு சொல்லி..... கதை விடுறாங்க. இது படத்தில் அனைவரையும் வேலை இல்லாமல் செய்து விடுகிறது.(ஹீரோ உட்பட)
  • ஹீரோவை ZERO ஆகிட்டாங்க.(வெயிட்டே  இல்லையே)
  • எல்லாம் எதிர்பார்த்தது போலவே நடக்கிறது.  NO SUSPENSE, NO CONFLICT. டல் அண்ட் ஸ்லோ .  கடைசியில படம் பார்த்த திருப்தியே இல்ல.  சப்புன்னு இருக்கு.
சூது கவ்வும் டைரக்டரை ..... ஆனால் அவர் மறுபடி வெல்வார்.
ப ப ப - படத்துக்கு பார்த்து போங்க 
30/100   ARREAR nganna...


Monday 7 March 2016

Hot News: Simbu's Next Film


Temper is a Telugu action film released in 2015, a super hit movie starring N.T. Rama Rao Jr and Kajal Agarwal.  A remake of this movie in Tamil is to get ready and Simbu is to act in the role of a corrupt police officer who gradually turns into a new leaf because of his love affair with a girl.

Saturday 5 March 2016

hot news - Kadhalum Kadanthu Pogum - ka ka ka po


The film which is to be released by March 11, starring Vijay Sethupathi and Madona sebastian has announced a dubsmash contest on Facebook with a reward of Rs.10,000/- for the winner who will also take home 40gm of silver.  Do you want to win?  Find more details below:

Dubsmash is a popular selfie video creator app and  it has been downloaded several millions worldwide. You can sing, speak or act in the voice of any celebrity you choose. You can make a dubed video of kaka ka po (any song or tune) with this application and upload it on facebook in "Abi and Abi Pictures".  You may be the winner. Hurry up.





பிச்சைக்காரன் - பணக்காரன் காண தவறிய உலகம்



கதை : (ஒரே  வரியில் )
சாகக் கிடக்கும் அம்மாவை காப்பாற்ற 48 நாட்கள் பிச்சைக்காரனாக மாறும் ஒரு பணக்காரனின் கதை.


விஜய் ஆண்டனி.  ஹீரோ.  நடிப்பதற்கு அதிகமான வாய்ப்பு கதையில். தயாரிப்பாளர் வேறு. ஆனால் முகத்தில் expressions ரொம்ப குறைவு.  நிறைய இடங்களில் கதாபாத்திரமாக மாறவே இல்லை.  body language சுத்தமாக இல்லை.  அம்மாவுக்காக அழும் காட்சிகள் நிறைவாக இல்லை.  பிச்சைக்காரனாக இருக்கும் போதும் டிப் டாப் ஆக உடை அணிந்து piza சாப்பிடுவது உறுத்தலான காட்சி.  சிரிப்பதற்கு காசு கேட்கும் முகத்தை மாற்றினால் ஒழிய, பாஸ் ஆவது கடினம்.   காட்சிக்கு, இடத்துக்கு, கதாபாத்திரத்துக்கு தகுந்தார் போல் நிறையவே மாற வேண்டியிருக்கிறது.  பாராட்ட வேண்டிய விஷயமும் இல்லாமல் இல்லை.  கதாநாயகி பின்னால் ஜொள்ளு விடும் ஹீரோ இல்லை.  வில்லனின் ஆட்களை பிளந்து கட்டுவது, எல்லாம் செய்து விட்டு, கடைசியில் தான் ஒரு பிச்சைக்காரன் என்று அறிமுகப்படுத்துவது, காதலியிடம் பிச்சை ஏந்துவது , அம்மாவிடம் கொஞ்ச நேரம் உயிரோட இருக்க பிச்சை கேட்பது என் பல காட்சிகளில் பலத்த கைத்தட்டலை பெறுகிறார்.


ஹீரோயின் சாதனா டைடஸ். தோன்றும் இடங்களில் கண்ணுக்கு குளிர்ச்சி.  மனசுக்கு இதம்.  ஆனால்  உண்மையிலேயே சமூக சேவகி என்றால் காதலன் பிச்சைக்காரன் என்று தெரிந்ததும் அதிர்ச்சி அடைவது எதனால்.  நடிப்பதற்கு கொடுத்த மற்ற வாய்ப்புகளை கட்சிதமாக முகத்தில் expressions உடன் செய்திருக்கிறார்.  பிச்சைக்காரன் என தெரிந்த பின்னும் அவனை மறக்க முடியவில்லை எனக் கூறுவது - காதல் காட்சிகளில் நச்.


காமெடிக்கு பஞ்சமில்லை.  வில்லனின் ஆட்கள் பிச்சைக்காரனிடம் அடி வாங்கியதை யாரிடமும் சொல்லக் கூடாது என சத்தியம் செய்ய சொல்லும் காட்சிகள் - தியேட்டரில் சிரிப்பு வெடி.  500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டு அடிப்பதை நிறுத்தினால் எப்படி கருப்பு பணத்துக்கும் இந்தியாவின் வறுமைக்கும் எப்படி முற்றுபுள்ளி வைக்கலாம் என்று பிச்சைக்காரன் மூர்த்தி கொடுக்கும் அட்வைஸ் -சிந்திக்க வைக்கும் தெறி காமெடி -  சபாஷ் இயக்குனர் சசி.  பெரியப்பா கோபம் வரும் போதெல்லாம் டிரைவரை அடிப்பது அதே டிரைவர் கிளைமாக்ஸ்ல் திருப்பி அடிக்க அரங்கமே சிரிப்பில் அதிர்கிறது.
      பின்னணி இசை காட்சிக்கு கை கொடுக்கவில்லை.  48-வது நாளை இன்னும் விறுவிறுப்பாக வைத்திருக்கலாம்.  போலீஸ் இரவு முழுவதும் சும்மா இருந்துவிட்டு மறுநாள் காலை 11 மணிக்கு வந்து நிற்பது நம்ப முடியவில்லை.  சொத்து எனக்குதான் தான் என அலையும் பெரியப்பா கடைசி வரையில் ஒன்றுமே செய்யவில்லை - ட்யூப் லைட்.  
ஆனால் எப்படியோ, பல வருடம் பிச்சைக்காரர் உலகத்தில் இருந்ததை போன்ற பீலிங்கஸ், அவர்கள் படும் கஷ்டத்தை ஆழமாக உணர வைத்ததோடு மட்டுமில்லாமல் அவர்களுக்கு ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்றும் நம் மனிதாபிமானத்தை தட்டி எழுப்புகிறார் இயக்குனர்  சசி - கலக்கிட்ட சந்த்ரு.

பிச்சைக்காரன் - குடும்பத்துடன் பார்க்கலாம் DonkeyMails.com: No Minimum Payout
70/100






Friday 26 February 2016

கணிதன் - திகில் விளையாட்டு

கதை : ஒரே வரியில்


போலி சான்றிதழ் தயாரிக்கும் கும்பலால் பாதிக்கப்பட்ட நியூஸ் ரிபோர்ட்டர் கதாநாயகன் அக்கும்பலை வேரோடு களைவதுதான் கதை.

கதை  சாதாரணம்.  ஆனால் திரைக்கதை அசாதாரணம்.  பிரமிப்பு.   அட்டகாசம்.  இயக்குனர் சந்தோஷ்,  முருகதாஸ் ன்  அசிஸ்டன்ட் டைரக்டர் ஆக இருந்தவர்.  முதல் படைப்பே ...  இப்படியா? காட்சிக்கு காட்சி விறுவிறுப்பு.  கைதட்டமா உங்களால இருக்க முடியுமா?  சவால் விட்டிருக்கிறார் டைரக்டர்.


அதர்வா ஸ்மார்ட் கலக்கல் ஹீரோ.  அபார துப்பறியும் மூளை.  தேவையான இடத்தில் தேவையான அளவு நடிப்பு, தேவையான அளவு ஆக் ஷன்.  தேவையான அளவு காமெடி.  பி.பி.சி. சேனல் இன்டெர்வியூவில் தமிழனை இங்கிலீஷ் தெரியாது என்று சொல்லி ஏளனம் செய்யும்போது இங்கிலிஷ்ல் பேசி அசத்துவது கைதட்டல்.  பர்த்டே சஸ்பென்ஸ் காமெடி நச்.  பாடல் காட்சிகளில் இளமையின் துள்ளல்.  சிறு சிறு தடயங்களை பிடித்து வில்லனிடம் மாட்டிக்கொண்ட நண்பனை காப்பாற்றுவது அசத்தல்.  சிங்கத்தை குகைக்கே சென்று அடிக்கடி சந்திப்பது ஆனால் மாட்டாமல் தப்பி வருவது பிரமிப்பு.  ஆனால் செத்துக்கிடக்கும் நண்பனையும் பாக்கியராஜையும் பார்த்து அழும் காட்சியிலும், அனைத்து ரிபோர்ட்டர்களையும் போலி சான்றிதழ் கும்பலுக்கு எதிராக தயார்படுத்தும் வசனக் காட்சியிலும் இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம்.


ஹீரோயின்  கேதரின் தெரசா.  பெயரில்தான் தெரசா.  மற்றபடி இறுக்கமான உடை,  தொப்புள் காட்டும் கிளாமர் டான்ஸ், உதடுகள் உரசும்  முத்தக்காட்சி,   என வழக்கமான தமிழ் சினிமா ஹீரோயின்தான். "நடிக்க வாய்ப்பே தர மாட்டேங்கிராறே இந்த டைரக்டர்" என்று எங்கோ ஓரமாய் நின்று அழும் குரல் கேட்கிறது.  ஆரம்பம் அதிக எதிபார்ப்பு.   ஆனால் போக போக ஓரங்கட்டல்.  ஒரு ரிபோர்ட்டராக இருந்து கொண்டு ஆபத்து தெரியாமல், வில்லன் ஆட்களிடமே வந்து கெளதம் வந்தாரா என கேட்டு வெகுளித் தனமாக மாட்டிக் கொள்வது காட்சிக்கு பிளஸ்.  கதாபாத்திரத்துக்கு  மைனஸ். கிளாமர் தவிர எதுவுமே தெரியாதா என்று என்ன தோன்றுகிறது.

பாடல்கள் ட்ரம்ஸ் சிவமணி.  குத்தாட்டம்.  வில்லன் ஜாக்கி ஜரூப் யதார்த்தம். மிரட்டல். ஹீரோவுக்கு நிகரான துப்பறியும் மூளை.  தூள்!.

 லாஜிக் இல்லாத இடங்கள்

  • ஜென்யுநெஸ் வெரிபிகேஷன் என்ற ஒன்று இருக்கும் போது உண்மையிலேயே தமிழ் நாட்டில் அவ்வளவு போலி சான்றிதழ் இருப்பதாக மிகை படுத்திக்காட்டுவது, அப்படித்தான் வேலை வாங்குகிறார்கள், அதனால் மற்றவர்களுக்கு திறமையானவர்களுக்கு வேலை கிடைப்பதில்லை  எனக் காட்டுவது நெருடல்.  நம்ப வைக்கும் பொய்.
  • போலி சான்றிதழ் கொடுத்து லோன் வாங்கினால்,  லோன் வாங்கியவரை விட்டுவிட்டு அசல் சான்றிதழ் கொடுத்து  வேலைக்கு சேர்ந்தவர்களை பிடித்து போலீஸ் துவசம் செய்வது அதிர்ச்சி. குழப்பம்.  ( பேங்க் அதிகாரிகளுக்கு கூடவா தெரியாது யார் லோன் வாங்கினார்கள் என்று?!)
  • இடைவேளைக்கு முன்பே போலி சான்றிதழ் பற்றி ஹீரோ எல்லா சேனலிலும் ஒளி பரப்ப, படம் இறுதிவரை காவல் துறையும் அரசாங்கமும் சும்மா இருப்பது - பெரிய ஓட்டைகள்.


விறுவிறுப்பான திரைக்கதை மற்றும் காட்சிகளை தந்த டைரக்டர், யதார்த்தையும், கதாபாத்திரங்களுக்கு நடிக்க வாய்ப்பையும் தந்திருக்கலாமே!
கணிதன்  - கணக்குல  புலி.  ஆனால் பொய்யன்.
62/100 - நல்ல படம் பார்க்கலாம்.

best song :


trailer :
     

Wednesday 17 February 2016

அஞ்சல - சென்டிமென்ட் தாக்குதல்



கதை :    
ஒரே  வரயில் :  ஒரு உயிருள்ள டீ கடையின் சுயசரிதை 

விளக்கமாக :
     தலைமுறைகள் (உயிராய் உறவாய் கலந்த )கண்ட டீ கடை.  தற்போது பசுபதியின் பொறுப்பில்.  நெடுஞ்சாலைத் துறை கடையை இடிக்க மார்க் போட, பல்வேறு தடைகளை தாண்டி கடைசியில் கோர்ட்ம்  கைவிட என்ன நடந்தது என்பதுதான் கதை.

கதையின் ஹீரோ விமல் தானா அல்லது சென்டி மென்ட் ஓனர் பசுபதியா?
இரண்டும் இல்ல.  ஹீரோவே சென்டிமென்ட் தான்.  1913-ல் தொடங்கி 2013-ல் 100-ஆம் ஆண்டு விழாவை கொண்டாடி பெர்த்டே கேக் வெட்டும் கடை தன் கதை வளர்வதற்காக படத்தில் எல்லார் கதையையும் முடிவுக்கு கொண்டுவருகிறது. (2013- டிசம்பர் -ல் தொடங்கிய சூட்டிங் ...2016 பிப்ரவரியில் ஒரு வழியாக ரிலீஸ் ஆகியிருக்கு ) 


தன்னை கொல்ல வரும் வில்லனின் மகளை கூட காப்பாற்றும் கடை, விமலுக்கு லோன் வாங்கித்தரும் கடை, திருமணம் ஆகாதவருக்கும் செட் பண்ணித்தரும் கடை, இறுதியில் தன்னையே இடித்துக்கொண்டு நெடுஞ்சாலைத் துறைக்கும் வழிவிட்டு நகரம் வளர இடம் கொடுக்கிறது.
(ஆனால் கதையில் எந்த கதாபாத்திரமும் வளர இடம் கொடுக்கவில்லை.)

விமல், நந்திதா (ஹீரோ, ஹீரோயின் ) என பல முக்கிய காணாமல் செய்துவிடுகிறது இந்த சென்டிமென்ட் டீ கடை )


காமெடி - சில இடங்களில் ரசிக்கும்படி.  ஆனால் பல இடங்களில் கடி. இமான் அண்ணாச்சியை டவுசர் உருவியதுதான் மிச்சம். (என்னவே படத்தில் இப்படி மானத்த வாங்குறீகளே வேய்!)

பாட்டு - ரசிக்கும்படிதான்.  ஆனால் கதையோடு ஒட்டவில்லை.

வசனம், திரைக்கதை, காமெடி, காதல், எல்லாமே விருவிருப்பின்றி செம டல் அடிக்கிறது.

சிக்கல்களே குறைவு.  நமது எதிர்பார்ப்பும் குறைவு. எனவே கிளைமாக்ஸ் கூட dull அடிக்கிறது.


தங்கம் சரவணன் (டைரக்டர்) அவர்களே!  ஒருவர் உயிரோடு கலந்த உயிருக்குயிரான ஒன்றை  இழக்க நேரிட்டால் அவரின் மன நிலை என்ன என்பதை சித்தரித்த உங்களுக்கு, விமலை கதையோடு பசை போட்டு ஒட்ட வைக்கத் தெரியலையே.  ஏகப்பட்ட கதாபாத்திரங்கள்.  தேவையற்ற காட்சிகள். உப்பு சப்பில்லாத கேட்டு கேட்டு சலித்துப்போன வசனங்கள். ஓவர் சென்டிமென்ட்.  இது எல்லாமே கதைக்கு ஆப்பு வைத்துவிடுகிறது.

அஞ்சல - பெற்றோரை தொலைத்து திருவிழாவில் அழும் குழந்தை.

40/100  Just  pass .






Friday 12 February 2016

ஜில் ஜங் ஜக் - கலைஞர்களின் கலக்கல் கைவண்ணம்



படத்தின் வெற்றி என்பது மக்களின் எதிபார்ப்பை பொறுத்ததல்ல.  கலைஞர்களின் கைவரிசையை பொறுத்தது.  வழக்கமான மசாலா கதை, குத்துப்பாட்டு,  கிளாமர் சாங், அரைத்த மாவை அரைத்தது போன்ற எந்த விஷயமும் இல்லாமல் ( ஹீரோயின் கூட இல்லாமல் ) தமிழ் சினிமா மரபை உடைத்துக் காட்டி துணிச்சலாக வெளிவந்துள்ள படம்தான் இந்த ஜில்.....

கதை :
ஒரு வரியில் :
                    "ஊழ் வினை உருண்டு வந்து உதைக்கும்."
கொஞ்சம் விபரமாக :
 ராவுத்தர் (ராதாரவி), தெய்வநாயகம் (அமரேந்திரன்) இருவரும் பரம எதிரிகள். பெரிய ரௌடிகள் (!?)  ஜில் (சித்தார்த் ), ஜங் (அவினாஷ் ரகுதேவன் ), ஜக் (சனந் ரெட்டி ) மூவரும் தெய்வ நாயகம் கொடுத்த வேலையை முடிக்க கிளம்பி, விதியின் கையில் பந்தாடப்பட்டு, ராவுத்தரிடமும் மாட்டிக்கொண்டு கடைசியில் மதியால் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதுதான் கலக்கலான காமடிக் கதை.

விமர்சனம்:

வழக்கமான மசாலா படத்தை எதிர்பார்ப்பவர்களுக்கு,  பொறுமை இல்லாதவர்களுக்கு, கலையை ரசிக்க தெரியாதவர்களுக்கு,  இது செம கடி. பெருத்த "ஏ" மாற்றம்.  ஆனால் புதுமையை விரும்புபவர்களுக்கு, கலைஞர்களின் மிரட்டல் அடியை பார்க்க ஆசைப்படுபவர்களுக்கு   இது வரப்பிரசாதம்.

நிஜ வாழ்கையில் அடுத்து என்ன நடக்கும்னு யாருக்கும் தெரியாது.  இந்த படத்திலும் அப்படித்தான்.  கலையின் அழகு சொல்லாமல் சொல்வது. சொல்லாததை சொல்வது. யாரும் அதை சொல்ல முடியாதபடிக்கு சொல்வது.
ஜில் ஜங் ஜக் -ம் அப்படித்தான். புதுமைகளின் உச்சம்.


ஜில்.  விதியை மதியால் வெல்லலாம் - எடுத்துக்காட்டு .  விதி சதி செய்யும் போது மதி கொண்டு நிலைமையை கூல் ஆக்கும் சித்தார்த் ஜில் தானே!  வீர வசனம் பேசும் ஹீரோ இல்லை.  உத்தம புத்திரனும் இல்லை.
புத்திசாலி.  திறமையானவன். என்ன யதார்த்தம்!



 ஜக். Little Knowledge is Dangerous.  விளையாட்டு வினையாகும் - எடுத்துக்காட்டு.   கார் ஓட்டுவதில் திறமைசாலி. ஆனால் ஜொள்ளு பார்ட்டி. கலர் கூட கண்டுபிடிக்க தெரியாத முட்டாள்.   கோலி குண்டு ஆடி  தனது சாகசத்தை காட்ட ராவுத்தரின் பெட்ரோல் கிடங்கே அழிய, கதை சூடு பிடிக்கிறது.  காமெடி கலக்கல்.



ராவுத்தர், தெய்வ நாயகம்.  காசே தான்  கடவுளடா.  வாழ்வே மாயம்.  பிரதிபலிப்பு.  ராவுத்தருக்கு அசையும் சொத்து ( உடல் -கேன்சர் ), அசையா சொத்து (பெட்ரோல் கிடங்கு ) இரண்டும் அவுட். தெய்வ நாயகத்துக்கு கடத்தலில் சேர்த்த எல்லாம் காணாமல் போச்சு. ஆனாலும் பணத்தாசை. முடிவு யாரும் எதிர்பார்க்காதது.  ஊழ் வலியது.  எவ்வளவு ஆழமான கதாபாத்திரங்கள்!  சபாஷ்.

எல்லா பாத்திரங்களுமே தனித்தன்மையில் பட்டையை கிளப்புகிறது.  சாதாரணம் போல் தெரிவது.  ஆனால், நம்மை திடுக்கிட செய்வது.  நமது எதிர்பார்பை துவசம் செய்வதே அவர்களின் வேலை. படத்தின் பெயரில் தொடங்கி, வசனங்கள், காட்சி அமைப்பு, பாட்டு, பின்னணி இசை, முதல் பாதி ரொம்ப சிறியது.  பின் பாதி ரொம்ப பெருசு, அப்பப்போ மர்மமாக வரும் சித்திரங்கள், வாசகங்கள், செட்டிங் 2020 -ல் இப்படி  எல்லாத்திலும் புதுமை.  இயக்குனர் தீரஜ் வைத்திக்கு உடம்பெல்லாம் (கலைஞனின் ) மூளை.



90/100  இது தாண்டா CREATIVITY.