Friday 26 February 2016

கணிதன் - திகில் விளையாட்டு

கதை : ஒரே வரியில்


போலி சான்றிதழ் தயாரிக்கும் கும்பலால் பாதிக்கப்பட்ட நியூஸ் ரிபோர்ட்டர் கதாநாயகன் அக்கும்பலை வேரோடு களைவதுதான் கதை.

கதை  சாதாரணம்.  ஆனால் திரைக்கதை அசாதாரணம்.  பிரமிப்பு.   அட்டகாசம்.  இயக்குனர் சந்தோஷ்,  முருகதாஸ் ன்  அசிஸ்டன்ட் டைரக்டர் ஆக இருந்தவர்.  முதல் படைப்பே ...  இப்படியா? காட்சிக்கு காட்சி விறுவிறுப்பு.  கைதட்டமா உங்களால இருக்க முடியுமா?  சவால் விட்டிருக்கிறார் டைரக்டர்.


அதர்வா ஸ்மார்ட் கலக்கல் ஹீரோ.  அபார துப்பறியும் மூளை.  தேவையான இடத்தில் தேவையான அளவு நடிப்பு, தேவையான அளவு ஆக் ஷன்.  தேவையான அளவு காமெடி.  பி.பி.சி. சேனல் இன்டெர்வியூவில் தமிழனை இங்கிலீஷ் தெரியாது என்று சொல்லி ஏளனம் செய்யும்போது இங்கிலிஷ்ல் பேசி அசத்துவது கைதட்டல்.  பர்த்டே சஸ்பென்ஸ் காமெடி நச்.  பாடல் காட்சிகளில் இளமையின் துள்ளல்.  சிறு சிறு தடயங்களை பிடித்து வில்லனிடம் மாட்டிக்கொண்ட நண்பனை காப்பாற்றுவது அசத்தல்.  சிங்கத்தை குகைக்கே சென்று அடிக்கடி சந்திப்பது ஆனால் மாட்டாமல் தப்பி வருவது பிரமிப்பு.  ஆனால் செத்துக்கிடக்கும் நண்பனையும் பாக்கியராஜையும் பார்த்து அழும் காட்சியிலும், அனைத்து ரிபோர்ட்டர்களையும் போலி சான்றிதழ் கும்பலுக்கு எதிராக தயார்படுத்தும் வசனக் காட்சியிலும் இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம்.


ஹீரோயின்  கேதரின் தெரசா.  பெயரில்தான் தெரசா.  மற்றபடி இறுக்கமான உடை,  தொப்புள் காட்டும் கிளாமர் டான்ஸ், உதடுகள் உரசும்  முத்தக்காட்சி,   என வழக்கமான தமிழ் சினிமா ஹீரோயின்தான். "நடிக்க வாய்ப்பே தர மாட்டேங்கிராறே இந்த டைரக்டர்" என்று எங்கோ ஓரமாய் நின்று அழும் குரல் கேட்கிறது.  ஆரம்பம் அதிக எதிபார்ப்பு.   ஆனால் போக போக ஓரங்கட்டல்.  ஒரு ரிபோர்ட்டராக இருந்து கொண்டு ஆபத்து தெரியாமல், வில்லன் ஆட்களிடமே வந்து கெளதம் வந்தாரா என கேட்டு வெகுளித் தனமாக மாட்டிக் கொள்வது காட்சிக்கு பிளஸ்.  கதாபாத்திரத்துக்கு  மைனஸ். கிளாமர் தவிர எதுவுமே தெரியாதா என்று என்ன தோன்றுகிறது.

பாடல்கள் ட்ரம்ஸ் சிவமணி.  குத்தாட்டம்.  வில்லன் ஜாக்கி ஜரூப் யதார்த்தம். மிரட்டல். ஹீரோவுக்கு நிகரான துப்பறியும் மூளை.  தூள்!.

 லாஜிக் இல்லாத இடங்கள்

  • ஜென்யுநெஸ் வெரிபிகேஷன் என்ற ஒன்று இருக்கும் போது உண்மையிலேயே தமிழ் நாட்டில் அவ்வளவு போலி சான்றிதழ் இருப்பதாக மிகை படுத்திக்காட்டுவது, அப்படித்தான் வேலை வாங்குகிறார்கள், அதனால் மற்றவர்களுக்கு திறமையானவர்களுக்கு வேலை கிடைப்பதில்லை  எனக் காட்டுவது நெருடல்.  நம்ப வைக்கும் பொய்.
  • போலி சான்றிதழ் கொடுத்து லோன் வாங்கினால்,  லோன் வாங்கியவரை விட்டுவிட்டு அசல் சான்றிதழ் கொடுத்து  வேலைக்கு சேர்ந்தவர்களை பிடித்து போலீஸ் துவசம் செய்வது அதிர்ச்சி. குழப்பம்.  ( பேங்க் அதிகாரிகளுக்கு கூடவா தெரியாது யார் லோன் வாங்கினார்கள் என்று?!)
  • இடைவேளைக்கு முன்பே போலி சான்றிதழ் பற்றி ஹீரோ எல்லா சேனலிலும் ஒளி பரப்ப, படம் இறுதிவரை காவல் துறையும் அரசாங்கமும் சும்மா இருப்பது - பெரிய ஓட்டைகள்.


விறுவிறுப்பான திரைக்கதை மற்றும் காட்சிகளை தந்த டைரக்டர், யதார்த்தையும், கதாபாத்திரங்களுக்கு நடிக்க வாய்ப்பையும் தந்திருக்கலாமே!
கணிதன்  - கணக்குல  புலி.  ஆனால் பொய்யன்.
62/100 - நல்ல படம் பார்க்கலாம்.

best song :


trailer :
     

Wednesday 17 February 2016

அஞ்சல - சென்டிமென்ட் தாக்குதல்



கதை :    
ஒரே  வரயில் :  ஒரு உயிருள்ள டீ கடையின் சுயசரிதை 

விளக்கமாக :
     தலைமுறைகள் (உயிராய் உறவாய் கலந்த )கண்ட டீ கடை.  தற்போது பசுபதியின் பொறுப்பில்.  நெடுஞ்சாலைத் துறை கடையை இடிக்க மார்க் போட, பல்வேறு தடைகளை தாண்டி கடைசியில் கோர்ட்ம்  கைவிட என்ன நடந்தது என்பதுதான் கதை.

கதையின் ஹீரோ விமல் தானா அல்லது சென்டி மென்ட் ஓனர் பசுபதியா?
இரண்டும் இல்ல.  ஹீரோவே சென்டிமென்ட் தான்.  1913-ல் தொடங்கி 2013-ல் 100-ஆம் ஆண்டு விழாவை கொண்டாடி பெர்த்டே கேக் வெட்டும் கடை தன் கதை வளர்வதற்காக படத்தில் எல்லார் கதையையும் முடிவுக்கு கொண்டுவருகிறது. (2013- டிசம்பர் -ல் தொடங்கிய சூட்டிங் ...2016 பிப்ரவரியில் ஒரு வழியாக ரிலீஸ் ஆகியிருக்கு ) 


தன்னை கொல்ல வரும் வில்லனின் மகளை கூட காப்பாற்றும் கடை, விமலுக்கு லோன் வாங்கித்தரும் கடை, திருமணம் ஆகாதவருக்கும் செட் பண்ணித்தரும் கடை, இறுதியில் தன்னையே இடித்துக்கொண்டு நெடுஞ்சாலைத் துறைக்கும் வழிவிட்டு நகரம் வளர இடம் கொடுக்கிறது.
(ஆனால் கதையில் எந்த கதாபாத்திரமும் வளர இடம் கொடுக்கவில்லை.)

விமல், நந்திதா (ஹீரோ, ஹீரோயின் ) என பல முக்கிய காணாமல் செய்துவிடுகிறது இந்த சென்டிமென்ட் டீ கடை )


காமெடி - சில இடங்களில் ரசிக்கும்படி.  ஆனால் பல இடங்களில் கடி. இமான் அண்ணாச்சியை டவுசர் உருவியதுதான் மிச்சம். (என்னவே படத்தில் இப்படி மானத்த வாங்குறீகளே வேய்!)

பாட்டு - ரசிக்கும்படிதான்.  ஆனால் கதையோடு ஒட்டவில்லை.

வசனம், திரைக்கதை, காமெடி, காதல், எல்லாமே விருவிருப்பின்றி செம டல் அடிக்கிறது.

சிக்கல்களே குறைவு.  நமது எதிர்பார்ப்பும் குறைவு. எனவே கிளைமாக்ஸ் கூட dull அடிக்கிறது.


தங்கம் சரவணன் (டைரக்டர்) அவர்களே!  ஒருவர் உயிரோடு கலந்த உயிருக்குயிரான ஒன்றை  இழக்க நேரிட்டால் அவரின் மன நிலை என்ன என்பதை சித்தரித்த உங்களுக்கு, விமலை கதையோடு பசை போட்டு ஒட்ட வைக்கத் தெரியலையே.  ஏகப்பட்ட கதாபாத்திரங்கள்.  தேவையற்ற காட்சிகள். உப்பு சப்பில்லாத கேட்டு கேட்டு சலித்துப்போன வசனங்கள். ஓவர் சென்டிமென்ட்.  இது எல்லாமே கதைக்கு ஆப்பு வைத்துவிடுகிறது.

அஞ்சல - பெற்றோரை தொலைத்து திருவிழாவில் அழும் குழந்தை.

40/100  Just  pass .






Friday 12 February 2016

ஜில் ஜங் ஜக் - கலைஞர்களின் கலக்கல் கைவண்ணம்



படத்தின் வெற்றி என்பது மக்களின் எதிபார்ப்பை பொறுத்ததல்ல.  கலைஞர்களின் கைவரிசையை பொறுத்தது.  வழக்கமான மசாலா கதை, குத்துப்பாட்டு,  கிளாமர் சாங், அரைத்த மாவை அரைத்தது போன்ற எந்த விஷயமும் இல்லாமல் ( ஹீரோயின் கூட இல்லாமல் ) தமிழ் சினிமா மரபை உடைத்துக் காட்டி துணிச்சலாக வெளிவந்துள்ள படம்தான் இந்த ஜில்.....

கதை :
ஒரு வரியில் :
                    "ஊழ் வினை உருண்டு வந்து உதைக்கும்."
கொஞ்சம் விபரமாக :
 ராவுத்தர் (ராதாரவி), தெய்வநாயகம் (அமரேந்திரன்) இருவரும் பரம எதிரிகள். பெரிய ரௌடிகள் (!?)  ஜில் (சித்தார்த் ), ஜங் (அவினாஷ் ரகுதேவன் ), ஜக் (சனந் ரெட்டி ) மூவரும் தெய்வ நாயகம் கொடுத்த வேலையை முடிக்க கிளம்பி, விதியின் கையில் பந்தாடப்பட்டு, ராவுத்தரிடமும் மாட்டிக்கொண்டு கடைசியில் மதியால் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதுதான் கலக்கலான காமடிக் கதை.

விமர்சனம்:

வழக்கமான மசாலா படத்தை எதிர்பார்ப்பவர்களுக்கு,  பொறுமை இல்லாதவர்களுக்கு, கலையை ரசிக்க தெரியாதவர்களுக்கு,  இது செம கடி. பெருத்த "ஏ" மாற்றம்.  ஆனால் புதுமையை விரும்புபவர்களுக்கு, கலைஞர்களின் மிரட்டல் அடியை பார்க்க ஆசைப்படுபவர்களுக்கு   இது வரப்பிரசாதம்.

நிஜ வாழ்கையில் அடுத்து என்ன நடக்கும்னு யாருக்கும் தெரியாது.  இந்த படத்திலும் அப்படித்தான்.  கலையின் அழகு சொல்லாமல் சொல்வது. சொல்லாததை சொல்வது. யாரும் அதை சொல்ல முடியாதபடிக்கு சொல்வது.
ஜில் ஜங் ஜக் -ம் அப்படித்தான். புதுமைகளின் உச்சம்.


ஜில்.  விதியை மதியால் வெல்லலாம் - எடுத்துக்காட்டு .  விதி சதி செய்யும் போது மதி கொண்டு நிலைமையை கூல் ஆக்கும் சித்தார்த் ஜில் தானே!  வீர வசனம் பேசும் ஹீரோ இல்லை.  உத்தம புத்திரனும் இல்லை.
புத்திசாலி.  திறமையானவன். என்ன யதார்த்தம்!



 ஜக். Little Knowledge is Dangerous.  விளையாட்டு வினையாகும் - எடுத்துக்காட்டு.   கார் ஓட்டுவதில் திறமைசாலி. ஆனால் ஜொள்ளு பார்ட்டி. கலர் கூட கண்டுபிடிக்க தெரியாத முட்டாள்.   கோலி குண்டு ஆடி  தனது சாகசத்தை காட்ட ராவுத்தரின் பெட்ரோல் கிடங்கே அழிய, கதை சூடு பிடிக்கிறது.  காமெடி கலக்கல்.



ராவுத்தர், தெய்வ நாயகம்.  காசே தான்  கடவுளடா.  வாழ்வே மாயம்.  பிரதிபலிப்பு.  ராவுத்தருக்கு அசையும் சொத்து ( உடல் -கேன்சர் ), அசையா சொத்து (பெட்ரோல் கிடங்கு ) இரண்டும் அவுட். தெய்வ நாயகத்துக்கு கடத்தலில் சேர்த்த எல்லாம் காணாமல் போச்சு. ஆனாலும் பணத்தாசை. முடிவு யாரும் எதிர்பார்க்காதது.  ஊழ் வலியது.  எவ்வளவு ஆழமான கதாபாத்திரங்கள்!  சபாஷ்.

எல்லா பாத்திரங்களுமே தனித்தன்மையில் பட்டையை கிளப்புகிறது.  சாதாரணம் போல் தெரிவது.  ஆனால், நம்மை திடுக்கிட செய்வது.  நமது எதிர்பார்பை துவசம் செய்வதே அவர்களின் வேலை. படத்தின் பெயரில் தொடங்கி, வசனங்கள், காட்சி அமைப்பு, பாட்டு, பின்னணி இசை, முதல் பாதி ரொம்ப சிறியது.  பின் பாதி ரொம்ப பெருசு, அப்பப்போ மர்மமாக வரும் சித்திரங்கள், வாசகங்கள், செட்டிங் 2020 -ல் இப்படி  எல்லாத்திலும் புதுமை.  இயக்குனர் தீரஜ் வைத்திக்கு உடம்பெல்லாம் (கலைஞனின் ) மூளை.



90/100  இது தாண்டா CREATIVITY.

Sunday 7 February 2016

இறுதி சுற்று - இறுதிச் சுற்றில் வெற்றி


கதை : பாக்ஸிங்தான் உயிர் என்றிருக்கும் மாதவன், தான் எல்லாவற்றையும் இழந்து எப்படி ஒரு மீன் குப்பத்து பெண்ணை உலக குத்துச்சண்டை சாம்பியனாக்குகிறார் என்பதுதான் கதை.

யதார்த்தமான நடிப்பு, யதார்த்தமான திரைக்கதை,யதார்த்தமான வசனம்,யதார்த்தமான குத்துச்சண்டை
காட்சிகள் என யதார்த்தம் படத்தை வெற்றியின் உச்சிக்கே எடுத்துச் செல்கிறது.

கதாநாயகி  ரிதிகா சிங் உண்மையிலேயே பாக்ஸர்.  படத்தில் சொல்லவா வேண்டும்?! ஆரம்பத்தில் தண்டால் எடுக்கும் காட்சியிலிருந்துஇறுதிச் சுற்றில் Knock out செய்யும் காட்சி வரை படத்தின் வெற்றிக்கு அச்சாணி.

மாதவன் 4 வருடங்களுக்கு பிறகு ஒரு அழுத்தமான கதாபாத்திரம்.  பொண்டாட்டி ஓடிப் போனவள்.  தினம் ஒரு பெண் என பொம்பள பொறுக்கி கதாப்பாத்திரம். வயது பதவி பார்க்காமால் யாரையும் மதிக்காத அதிர்ச்சிக்குள்ளாக்கும்  பாக்ஸிங் கோச்.

ஆனால் அவர் பணத்தையும் மதிக்காமல், அவள் அவமானப் படுத்துவதையும் பொறுத்து, தன் பதவியையும் ராஜினாமா செய்து ஒரு குப்பத்து பெண்ணை உலக செய்தியாக்கும் போது ... தன்னிகரற்ற மாஸ்டராக உயர்ந்து நிற்கிறார்.

காதலுக்கு, டூயட் சாங்குக்கு, காமெடி நடிகர்களுக்கு, குத்துப்பாட்டுக்கு  கதையில் இடங்கொடுத்து மாட்டிக்கொள்ள விரும்பாத  புத்திசாலித்தனமான வெற்றிப்பட டைரக்டர் சுதா கோங்குரா- சபாஷ் துணிச்சலான ஆளுதாங்கோ!

எல்லாம் சரி. விளையாட்டில் ஆர்வம் இல்லாதவர்களுக்கு இந்தப் படம் பிடிக்குமா?  நீங்களும் கடைசிக் காட்சியில் ( ஆனந்த) கண்ணீர் வடிப்பீர்!  நம்பி போங்க...

80 /100. - அபார வெற்றி.

Friday 5 February 2016

பாகுபலி - 2. HOT NEWS

Shooooooting (yes really big one, hundreds of artists sweating everyday) is now scheduled for three weeks in the forest of kerala.

Planned to see the screen on summer holidays.

Bahubali the Conclusion may be changed since Raja mouli has bahubali 3 (even more) in his mind.


Rana, playing the role of Prabhas Attends special training in martial art vietnamese trainer Tuan.

This time Anushka would get the weightage as first heroine.


1.5 crore homemade gymn and 40 half boiled egg every breakfast would make a different Rana.

Bahubali 2 story (shockingly) has been released online but with a question:



Baahubali / bahubali 2 The Conclusion : Amarendra Baahubali(prabhas) and Ballala deva (Rana) both loved Devasena only.But Devasena likes Baahubali.Both wanted to live together but Baahubali leaves the kingdom due to the non acceptance of his love by his mother.Baahubali and Devasena had lead their life happily. why did kattappa killed Bahubali Is the Big question
During this time Ballala deva treats the Mahishmati people as their slaves.Those people shows the disatisfaction toward him.And then Kalakeya brother (charan deep) shoots a war on Mahishmati. Baahubali then knoes the fact that Ballala deva is losing power, and he enters into the scene. Unfortunately Ballala deva and Bijjala deva joined with kattappa and they lost the life of Bahubali ,and at the same time Devasena gives birth to a baby boy. Sivagami (Ramya Krishna) saves the baby boy and make him grew up as a tribal boy. With this the flashback part completes.And now shivudu (prabhas) with the support of Avanthika (Tammana) fight against Ballala deva and finally wins the kingdom back .With this the second Part of Bahubali 2 the conclusion Story .. and it reveals why did kattappa killed bahubali / baahubali

click to see the trailer: https://www.google.co.in/url?sa=t&source=web&rct=j&url=https://www.youtube.com/watch%3Fv%3DVYxIPlEpu0Y&ved=0ahUKEwjl7-TjruLKAhXCRI4KHdGnD4QQtwIIHTAB&usg=AFQjCNHSQGBQhtonE3tImm_Xw4cg0sAZ3Q&sig2=sNOcG5Kd5CT5jwHF0JZJ5A