Wednesday 17 February 2016

அஞ்சல - சென்டிமென்ட் தாக்குதல்



கதை :    
ஒரே  வரயில் :  ஒரு உயிருள்ள டீ கடையின் சுயசரிதை 

விளக்கமாக :
     தலைமுறைகள் (உயிராய் உறவாய் கலந்த )கண்ட டீ கடை.  தற்போது பசுபதியின் பொறுப்பில்.  நெடுஞ்சாலைத் துறை கடையை இடிக்க மார்க் போட, பல்வேறு தடைகளை தாண்டி கடைசியில் கோர்ட்ம்  கைவிட என்ன நடந்தது என்பதுதான் கதை.

கதையின் ஹீரோ விமல் தானா அல்லது சென்டி மென்ட் ஓனர் பசுபதியா?
இரண்டும் இல்ல.  ஹீரோவே சென்டிமென்ட் தான்.  1913-ல் தொடங்கி 2013-ல் 100-ஆம் ஆண்டு விழாவை கொண்டாடி பெர்த்டே கேக் வெட்டும் கடை தன் கதை வளர்வதற்காக படத்தில் எல்லார் கதையையும் முடிவுக்கு கொண்டுவருகிறது. (2013- டிசம்பர் -ல் தொடங்கிய சூட்டிங் ...2016 பிப்ரவரியில் ஒரு வழியாக ரிலீஸ் ஆகியிருக்கு ) 


தன்னை கொல்ல வரும் வில்லனின் மகளை கூட காப்பாற்றும் கடை, விமலுக்கு லோன் வாங்கித்தரும் கடை, திருமணம் ஆகாதவருக்கும் செட் பண்ணித்தரும் கடை, இறுதியில் தன்னையே இடித்துக்கொண்டு நெடுஞ்சாலைத் துறைக்கும் வழிவிட்டு நகரம் வளர இடம் கொடுக்கிறது.
(ஆனால் கதையில் எந்த கதாபாத்திரமும் வளர இடம் கொடுக்கவில்லை.)

விமல், நந்திதா (ஹீரோ, ஹீரோயின் ) என பல முக்கிய காணாமல் செய்துவிடுகிறது இந்த சென்டிமென்ட் டீ கடை )


காமெடி - சில இடங்களில் ரசிக்கும்படி.  ஆனால் பல இடங்களில் கடி. இமான் அண்ணாச்சியை டவுசர் உருவியதுதான் மிச்சம். (என்னவே படத்தில் இப்படி மானத்த வாங்குறீகளே வேய்!)

பாட்டு - ரசிக்கும்படிதான்.  ஆனால் கதையோடு ஒட்டவில்லை.

வசனம், திரைக்கதை, காமெடி, காதல், எல்லாமே விருவிருப்பின்றி செம டல் அடிக்கிறது.

சிக்கல்களே குறைவு.  நமது எதிர்பார்ப்பும் குறைவு. எனவே கிளைமாக்ஸ் கூட dull அடிக்கிறது.


தங்கம் சரவணன் (டைரக்டர்) அவர்களே!  ஒருவர் உயிரோடு கலந்த உயிருக்குயிரான ஒன்றை  இழக்க நேரிட்டால் அவரின் மன நிலை என்ன என்பதை சித்தரித்த உங்களுக்கு, விமலை கதையோடு பசை போட்டு ஒட்ட வைக்கத் தெரியலையே.  ஏகப்பட்ட கதாபாத்திரங்கள்.  தேவையற்ற காட்சிகள். உப்பு சப்பில்லாத கேட்டு கேட்டு சலித்துப்போன வசனங்கள். ஓவர் சென்டிமென்ட்.  இது எல்லாமே கதைக்கு ஆப்பு வைத்துவிடுகிறது.

அஞ்சல - பெற்றோரை தொலைத்து திருவிழாவில் அழும் குழந்தை.

40/100  Just  pass .